தமிழ் மொழியின் வரலாறு (நூல்)
தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் இதன் 12 ஆவது பதிப்பு வெளியானது. 2003 ஆம் ஆண்டில் இதன் மறுபதிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழியின் வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | தமிழ் மொழியின் வரலாறு |
ஆசிரியர்(கள்): | நரசய்யா |
வகை: | மொழி வரலாறு |
துறை: | தமிழ் வரலாறு |
காலம்: | தொல்பழங்காலத்தில் இருந்து |
இடம்: | தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 104 |
பதிப்பகர்: | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |
பதிப்பு: | 2003 |
நோக்கம்
தொகுஇவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.[1]
உள்ளடக்கம்
தொகுஇந்நூல் பின்வரும் ஒன்பது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
- ஆதிவரலாறு
- வடமொழிக் கலப்பு
- மூவகைப் பாகுபாடு
- ஐவகை இலக்கணம்
- மொழியின் தோற்றமும் தொன்மையும்
- மொழியின் சிறப்பியல்பு
- மொழியின் வேறுபடுமாறு
- நூற்பரப்பு
- மொழியின் சீர்திருத்தம்
- முடிவுரை
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- சூரியநாராயண சாஸ்திரியார், வி. கோ., தமிழ் மொழியின் வரலாறு
- சூரியநாராயண சாஸ்திரியார், வி. கோ., தமிழ் மொழியின் வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.