தமைல்
தமால் ( வங்காள மொழி: ধামাল ), தமைல் ( வங்காள மொழி: ধামাইল என்று அறியப்படுகிறது ), என்பது அன்றைய வடகிழக்கு வங்காளத்தின் மைமென்சிங் மற்றும் சில்ஹெட் பகுதிகளான இன்றைய வங்காளதேசம் மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மக்களால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புற இசை மற்றும் நடனத்தின் ஒரு வடிவமாகும்.
வரலாறு
தொகுதமால் அல்லது தமைல் என்ற வார்த்தை பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. 15 ஆம் நூற்றாண்டில் பீர்பூமின் கவிஞர் சண்டிதாஸ், 16 ஆம் நூற்றாண்டில் சிட்டகாங்கின் கவிஞர் தவ்லத் வசீர் பஹ்ராம் கான் மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் சிட்டகாங்கின் மற்றுமொரு கவிஞர் தௌலத் காசி ஆகியோரின் படைப்புகளில் இந்த வகையைப் பற்றி காணலாம்.
நாட்டுப்புற இசையமைப்பாளர்களான ராதாராமன் தத்தா மற்றும் அர்கும் ஷா ஆகியோர் தமைல் நடன பாரம்பரியத்தை சில்ஹெட் பகுதிக்கு அறிமுகப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. [1]
உள்ளடக்கம்
தொகுபொதுவாக ஆண்களால் இசைக்கப்படும் மிருதங்கா, கர்தல்கள் போன்ற பல இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதோடு, நடனமும் ஆடுவர் . இந்த நடன வடிவம் இசை நாற்காலி விளையாட்டினைப் போன்றது, தாளத்தின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க நடன கலைஞர்கள் அதற்க்கு இணையாக மிக வேகமாக நடனமாட வேண்டும். இல்லாவிடில் நன்றாக ஆடும் கலைஞர்கள் மற்றவர்கள் ஒவ்வொருவராக அகற்றிவிடுவார்கள். இந்த நடன வடிவம் முக்கியமாக ராதை மற்றும் கிருஷ்ணரின் அன்பை தொடர்புபடுத்துகிறது மற்றும் இந்த நடன வடிவத்தின் உள் முக்கியத்துவம் என்னவென்றால், புதிதாக திருமணமான தம்பதிகள் நடனத்தோடு தங்கள் ஆன்மாக்களையும் அத்தகைய பாணியில் இணைக்க வேண்டும்.
பெண்களால் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் முக்கியமாக திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளின் போது நிகழ்த்தப்படுகிறது. பெண்கள் இசையின் துடிப்புக்கு ஏற்ப கைதட்டி வட்டமாக நகர்கிறார்கள். பாடல்கள் முதலில் தலைவரால் பாடப்பட்டு, பின்னர் மற்றவர்கள் பாடலுடன் இணைகிறார்கள். பாடல் வரிகள் முக்கியமாக ஷ்யாம் (கிருஷ்ணா) மற்றும் ராதாவுடன் தொடர்புடையவை. படிப்படியாக தாளமும் லயமும் உச்சத்திற்கு அதிகரிக்கிறது. அத்தோடு வட்டமாக நகர்வதின் வேகமும் அதிகரிக்கும் அதற்க்கு இடையில் பெண்கள் பான், பருப்பு மற்றும்/அல்லது தேநீர் அருந்துவதற்காக இடைவேளைகள் கொடுக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mahmud, Jamil (2008-04-03). "Radharaman Utsab '08 at TSC". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2009-01-28.