தம்பி கண்ணந்தானம்
தம்பி கண்ணந்தானம் (Thampi Kannanthanam) ஓர் இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் மலையாள சினிமாவில் பணியாற்றினார். 16 திரைப்பட்டங்களை இயக்கியுள்ளார்.[1][2][3]
தம்பி கண்ணந்தானம் | |
---|---|
பிறப்பு | காஞ்சிரப்பள்ளி, கோட்டயம் மாவட்டம், கேரளா, இந்தியா | 11 திசம்பர் 1953
இறப்பு | 2 அக்டோபர் 2018 பரதோடு, காஞ்சிரப்பள்ளி | (அகவை 64)
படித்த கல்வி நிறுவனங்கள் | செயின்ட் டோமினிக்ஸ் கல்லூரி |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1979 – 2018 |
பெற்றோர் | பேபி கண்ணந்தானம், தங்கம்மா |
வாழ்க்கைத் துணை | குஞ்சுமோள் |
பிள்ளைகள் | 2 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் 1953 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பேபி கண்ணந்தானம் மற்றும் தங்கம்மா ஆகியோருக்கு ஆறாவது மகனாக கேரள மாநிலம், கோட்டயத்தில் காஞ்சிப்பள்ளி எனும் ஊரில் பிறந்தார். அவர் எம்டி செமினரி பள்ளியிலும் செயின்ட் டொமினிக் கல்லூரியிலும் படித்தார். அவர் ஒரு உதவி இயக்குனராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தம்பி குஞ்சுமோள் என்பவரை திருமணம் செய்து கொண்டார், தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் ஏஞ்சல் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்
தொகு1983 ஆம் ஆண்டு தவளம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது ஒரு தீரம் (1980), அத்திமாரி (1981), மதரசிலே மோன் (1982), துடர்கதா (1991) ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1980-90 காலகட்டத்தில் மிகவும் தீவிரமாக இயங்கினார். ராசாவின் மகன், வழியோரக்காட்சிகள், பூமியிலே ராசாக்கண்மார், இந்திரசாலம், நாடோடி, சுக்கன், மற்றும் மாந்திரீகம் ஆகியவை இவரது இயக்கத்தில் வெளியான மிகவும் குறிப்பிடத்தக்க சில படங்களாகும்.
இறப்பு
தொகுதம்பி கண்ணந்தானம் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடைந்தது 2 அக்டோபர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "തമ്പി കണ്ണന്താനം മോഹന്ലാലിനെ വെല്ലുവിളിച്ചു". www.mangalam.com.
- ↑ "All you want to know about #ThampiKannanthanam".
- ↑ "Thampi Kannanthanam about Mohanlal".
- ↑ "Filmmaker Thampi Kannanthanam passes away". Indian Express. https://indianexpress.com/article/entertainment/malayalam/thampi-kannanthanam-dead-5382569/.