தயாமணி பர்லா

தயாமணி பார்லா இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆவார். கிழக்கு ஜார்க்கண்டில் உள்ள ஆர்சலர் மிட்டலின் எஃகு ஆலைக்கு எதிராக செயல்பட்டதில் இவா் குறிப்பிடத்தக்கவர் ஆவார்,இந்த ஆலை நிர்மானிக்கப்பட்டால் நாற்பது கிராமங்களை இடம்பெயரச் செய்வார்கள் என பழங்குடி செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

தயாமணி பிர்லா
2012 விப்ஜியார் திரைப்பட விழாவில் தயாமணி பிர்லா
தேசியம்இந்தியன்
பணிஊடகவியலாளர்
அமைப்பு(கள்)ஆதிவாசி, மூலவாசி, அஸ்தித்வ ரக்ச மஞ்சி
விருதுகள்2000 ஆம் ஆண்டில் கிராமிய பத்திரிகைக்கான ஊடக விருது, 2004 ஆம் ஆண்டில் இந்தியா கூட்டாளர் தேசிய அறக்கட்டளை விருது

பர்லா தனது ஊடகப்பணிக்காக பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளார்.[1] 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜார்கண்டின் கூண்டி மக்களவைத் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றார்.[2][3]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தயாமணி கிழக்கு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி குடும்பத்தில் (இந்தியாவில் ஆதிவாசி என்றும் அழைக்கப்படுகிறது) பிறந்தார். அவரது குடும்பம் முண்டா பழங்குடி இனத்தைச் சேர்ந்தது. பிராந்தியத்தில் உள்ள மற்ற பழங்குடியினரைப் போலவே தயாமணியின் தந்தையும் எழுதப்படிக்கத் தெரியாததாலும் நிலத்திற்கான தனது உரிமைகளைக் காட்ட ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும்அவரது சொத்துகள் அபகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டார், தயாமணியின் தந்தை ஒரு நகரத்தில் வேலைக்காரராகவும், அவளுடைய தாய் இன்னொரு நகரத்தில் பணிப்பெண்ணாகவும் இருந்தனர். ஜார்க்கண்ட பள்ளி ஒன்றில் 5 முதல் 7 ஆம் வகுப்பு வரை பெயர் இருந்த போதிலும் பண்ணைகளில் பகல் நேர வேலையாளாகப் பணியாற்றினார். மேல்நிலைக்கல்வியைத் தொடர, ராஞ்சிக்குச் சென்று இங்கும் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார். அவர், ஊடகவியல் கல்வியைத் தொடர சில சமயங்களில் ரயில் நிலையங்களில் தூங்கினார்.[4]

தொழில் தொகு

ஜார்கண்ட் பிராந்தியத்தில் முண்டா மக்கள் மற்றும் பிற பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளை பொது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக பர்லா பிரபலமான இந்தி செய்தித்தாளான பிரபாத் கபரில் பணியாற்றுகிறார். அவர் இந்திய சமூக நடவடிக்கை மன்றத்தின் தேசியத் தலைவராக INSAF .பதவி வகித்து வருகிறார். முன்னதாக அவரது பத்திரிகை பணிக்கு இந்திய அபிவிருத்தி சங்கம் (எய்ட்) சில ஆண்டுகளாக ஒரு சிறிய கூட்டுதவி நிதியால் ஆதரித்தது.[5] பார்லா தனது ஊடகத்துறை வாழ்க்கையைத் திறம்பட ஆதரிக்கும் ஒரு தேநீர் கடையைத் துவங்கி நடத்தி வருகிறார். சமூக பிரச்சினைகள் விவாதிக்கப்படும் இடங்களாக தேநீர் கடைகள் இருப்பதால் இந்தத் தொழிலை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்தார்.[6]

போராட்டங்கள் தொகு

ஜார்க்கண்ட் மாநிலம் இயற்கை வளங்களால் நிறைந்து கானப்படும் மாநிலம் ஆகும். எனவே பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உலோகத்தாது பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நிலத்தை கையகப்படுத்தியுள்ளன. பழங்குடி மக்கள் இழப்பீடு பெற வேண்டும் என்று கருதப்பட்டாலும், ஏராளமான செயற்பாட்டாளர்கள் தங்களுக்கு போதுமான இழப்பீடு இன்னும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஆர்சிலார் மிட்டல் இரும்பு ஆலைக்காக 12 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடத் தொடங்கிய தயாமணி. தொடர்ந்து, கோயல் கரோ அணை திட்டத்துக்கு எதிரான போராட்டம், நகரி கிராமத்து மக்களை அப்புறப்படுத்திய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் இவா் நடத்திய போராட்டம் ஆகும். காட்டு வேலை, வீட்டு வேலை, மக்களைத் திரட்டி கூட்டம் போடுதல், போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வழக்கு என்று தயாமணி ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கிறார். 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Basu, Moushumi (2008). "Steely resolve:Dayamani Barla". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7610127.stm. பார்த்த நாள்: 14 October 2008. 
  2. "AAP introduces seven candidates in fray in Jharkhand". http://timesofindia.indiatimes.com/city/ranchi/AAP-introduces-seven-candidates-in-fray-in-Jharkhand/articleshow/32886194.cms. 
  3. Kislaya, Kelly. "NOTA ahead of AAP in many seats". http://timesofindia.indiatimes.com/news/NOTA-ahead-of-AAP-in-many-seats/articleshow/35271476.cms. பார்த்த நாள்: 15 December 2015. 
  4. "Off India's Beaten Path". UCLA. 2008. Archived from the original on 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 14 October 2008.
  5. "Dayamani Barla: Indigenous Journalist and Activist from India". Media Activism. 2007. பார்க்கப்பட்ட நாள் 14 October 2008.
  6. name="UCLA">"Off India's Beaten Path". UCLA. 2008. Archived from the original on 5 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 October 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=308&id1=65&issue=20121128
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாமணி_பர்லா&oldid=3774940" இலிருந்து மீள்விக்கப்பட்டது