தயா சிங் சோதி
இந்திய அரசியல்வாதி
தயா சிங் சோதி (Daya Singh Sodhi) (1 பிப்ரவரி 1925 - 15 சூலை 2011) பஞ்சாபின் நகரமான அமிர்தசரசைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள புடாலா கிராமத்தில் பிறந்தார். 1991 ஆம் ஆண்டில் இவர் அமிர்தசரஸ் நகராட்சிக் கழகத்திற்கும், 1998 ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] சிங் சோதி 15 சூலை 2011 அன்று தனது 86வது வயதில் மாரடைப்பால் இறந்தார். [2] [3]
தயா சிங் சோதி | |
---|---|
அம்ரித்சர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1998–1999 | |
முன்னையவர் | ஆர். எல். பாட்டியா |
பின்னவர் | ஆர். எல். பாட்டியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1925 |
இறப்பு | 15 சூலை 2011 அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா | (அகவை 86)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biodata". India Press. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
- ↑ "BJP leader Daya Singh Sodhi dead". Indian Tribune. https://www.tribuneindia.com/2011/20110716/punjab.htm#19. பார்த்த நாள்: 31 January 2022.
- ↑ "Punjab assembly session commences". Kashmir Media Watch. https://www.kashmirmediawatch.com/punjab-assembly-session-commences/. பார்த்த நாள்: 31 January 2022.