தயா (பாடகர்)

தயா (Daya) என்கிற கிரேஸ் மார்ட்டின் தாண்டன் 1998 அக்டோபர் 24இல்[2] பென்சில்வேனியா, மவுண்ட் லெபனானில் பிறந்த ஒரு அமெரிக்க பாடகர் ஆவார்.[3][4] இவர், ஆர்ட்பீட் இசட் என்டெர்டெயின்மென்ட் மற்றும் ரெட் டிஸ்டிரிபியூசன் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, "எக்ஸ்டென்டட் ப்ளே தயா" என்கிற பெயரில் தனது இசைத் தொகுப்பினை செப்டம்பர் 4, 2015இல் வெளியிட்டார். இதில் "பில்போர்டு ஹா 100ல் 23வது இடத்தைப் பிடித்த "ஹைட் அவே" பாடலும் அடங்கும்.[5][6] அக்டோபர் 7, 2016 அன்று அவர் அறிமுகமான "சிட் ஸ்டில், லுக் ப்ரட்டி" இசைத் தொகுப்பினை வெளியிட்டார்.

தயா
Daya 2016.jpg
2016இல் லாஸ் ஏஞ்ச்ல்ஸின் ஒரு நிகழ்ச்சியில் தயா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கிரேஸ் மார்ட்டின் தான்டன்
பிறப்புஅக்டோபர் 24, 1998 (1998-10-24) (அகவை 21)[1]
மவுண்ட் லெபனான், பென்சில்வேனியா, அமெரிக்க ஐக்கிய நாடு.
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
  • பாடல் எழுதுவபர்
இசைத்துறையில்2015 முதல் தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்
  • இசட்
  • ரெட்
  • இன்டெர்ஸ்கோப்
இணையதளம்theofficialdaya.com

ஆரம்ப வாழ்க்கைதொகு

தயா, பிட்ஸ்பர்க் நகரில் பிறந்தார் மற்றும் பென்சில்வேனியாவிலுள்ள மவுண்ட் லெபனானின் புறநகர் பகுதியில் வளர்ந்தார். அவரின் தந்தைவழி தாத்தா ஒரு இந்திய அமெரிக்கர் ஆவார். ஒரு பஞ்சாபியரான இவரின் தாத்தா, இந்தியாவிலிருந்து, அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு, ரேச்சல், மரியானா, சீலியா மற்றும் ஏவரி என்ற நான்கு சகோதரிகள் உள்ளனர். இவருடைய பெயரான தயா என்கிற சமஸ்கிருத சொல்லிற்கு, "கருணை" அல்லது "இரக்கம்" எனப் பொருள்படும்.[7] இவர், ஆரம்பக் கல்வியை செயின்ட் பெர்னார்ட் பள்ளியில் கற்றார். பின்னர் அவர் மவுண்ட். லெபனான் உயர்நிலை பள்ளியில்,[8] பட்டம் பெற்றார்.[9] தன் 3வது வயதில், பியானோவைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார், தனது பதினோராவது வயதில் ஜாஸ் பியானோவு கற்றுக்கொள்ளாத் துவங்கினார். அதே சமயத்தில் உகுலெலெ, சாக்ஸபோன், மற்றும் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொண்டார்.[8] உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, தயா, இன்டர்லோச்சென் ஆர்ட்ஸ் முகாமில் பாடல் எழுதுவதற்கான பயிற்சியை மேற்கொண்டார்.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயா_(பாடகர்)&oldid=2701049" இருந்து மீள்விக்கப்பட்டது