தயோ அமைடு
தயோ அமைடு (Thioamide) என்பது R–CS–NR′R″ என்ற பொதுக் கட்டமைப்பில் காணப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். இங்குள்ள R, R′, மற்றும் R″ என்பவை கரிமக் குழுக்களாகும். தயோ அமைடு அரிதாக தயோனமைடு என்றும் தயோயூரைலீன்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வகைச் சேர்மங்கள் அமைடுகளை ஒத்திருக்கின்றன. ஆனால் அவை C-N பிணைப்புடன் பெரிய பல்பிணைப்புகள் கொண்டிருக்கும் பண்பை பெற்றுள்ளன. இதன் விளைவாக ஒற்றைப்பிணைப்புகள் மாற்றப்பட்டு சுழற்சிமாற்றியங்கள் உண்டாகின்றன [1]. தயோ அசிட்டமைடு என்ற சேர்மம் நன்கு அறியப்பட்ட ஒரு தயோ அமைடுக்கு உதாரணமாகும். பல்வளைய வேதியியலில் கட்டுறுப்பு தொகுதியாகவும், சல்பைடு அயனிகளின் மூலமாகவும் தயோ அசிட்டமைடு பயன்படுகிறது. தயோ அமைடுகள் தைராய்டு எதிர்ப்பு மருந்துகளாகும். கேடயச் சுரப்பி மிகை இயக்க நோய்களை கட்டுப்படுத்தும் மருந்து வகையைச் சேர்ந்தது என்று இதை வகைப்படுத்துகிறார்கள்.
தயாரிப்பு
தொகுஅமைடுகளுடன் பாசுபரசு பென்டாசல்பைடு போன்ற பாசுபரசு சல்பைடுகளைச் சேர்த்து சூடுபடுத்தும்போது தயோ அமைடுகள் உருவாகின்றன. லாவ்சென்சு வினைப்பொருள் சில குறிப்பிட்ட வகை பயன்பாடுகளுக்கு ,மட்டும் பயன்படுத்தப்படுகிறது[2][3]. நைட்ரைல்களுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்வது ஒரு மாற்று வழிமுறையாகும்.
வில்கெரோட்-கிண்டுலர் வினையில் பென்சைல்தயோ அமைடுகள் உருவாகின்றன[4]. தயோ அமைடுகளின் C2NH2S உள்ளகம் சமதளமாகும். தயோ அசிட்டமைடை ஒரு பிரதிநிதியாகக் கொண்டால்: C-S, C-N, மற்றும் C-C பிணைப்பு இடைவெளிகள் முறையே 1.68, 1.31, மற்றும் 1.50 Å என்றமைகின்றன. C-S மற்றும் C-N பிணைப்புகளின் குறுகிய இடைவெளிகள் பல் பிணைப்புகளை குறிப்பிடுகின்றன[5].
மருந்து மற்றும் உயிர்வேதியியலில் தயோ அமைடுகள்
தொகுகேடயச் சுரப்பி மிகை இயக்க நோய்களை கட்டுப்படுத்தும் மருந்து வகையைச் சேர்ந்தது என்று தயோ அமைடை வகைப்படுத்துகிறார்கள்.
பெப்டைடுகளில் அமைடு பிணைப்புகளுக்கான ஒத்த எலக்ட்ரான் அமைப்புடைய சேர்மங்களாக தயோ அமைடுகள் இணைக்கப்படுகின்றன [6]. இயற்கை பெப்டைடுகளுக்கு பெப்படைடு மாற்ற சேர்மங்கள் ஒத்தவரிசை சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. இவையே கட்டமைப்பு-செயல்பாட்டுத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன. பெப்டைடு ஒத்தவரிசைச் சேர்மங்களை உடலின் மருந்து இருப்புக்கு ஏற்றவாறு வாய்வழி மருந்துகளாகவும் கொடுக்க பயன்படுத்தலாம். தைராய்டில் சுரக்கும் நொதியான தைராய்டு பெராக்சிடேசை தயோ அமைடு தடுத்து டிரையையோடோதைரோனின் (டி3) மற்றும் தைராக்சின் (டி4) உருவாதலைத் தடுக்கிறது. இதனால் கூழ்மத்திலிருந்து அயோடோடைரோசின்களை எடுத்துக் கொள்ளப்படுவது தடுக்கப்படுகிறது. வெளிப்புற இயக்குநீர்களிலிருந்து அயோடின் வெளிப்படுவதையும் இவை தடுக்கின்றன.
அதிகமான விளைவுகள் ஒரு மாதத்திற்குப் பின் மட்டுமே வெளிப்படுகின்றன. ஏனெனில் இயக்குநீர் குறைபாடு என்பது மெதுவாக பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு செயல்முறையாகும்.
மெத்திமசோல், கார்பிமசோல் மற்றும் புரோப்பைல்தயோயுராசில் உள்ளிட்டவை தயோ அமைடு குழுவில் இடம்பெற்றுள்ள சில சேர்மங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wiberg, Kenneth B.; Rablen, Paul R. (1995). "Why Does Thioformamide Have a Larger Rotational Barrier Than Formamide?". J. Am. Chem. Soc. 117 (8): 2201–2209. doi:10.1021/ja00113a009.
- ↑ Gompper, R.; Elser, W. (1973). "2-Methylmercapto-N-Methyl-Δ2-Pyrroline". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV5P0780.; Collective Volume, vol. 5, p. 780
- ↑ Schwarz, George (1955). "2,4-Dimethylthiazole". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV3P0332.; Collective Volume, vol. 3, p. 332
- ↑ Rolfs, Andreas; Liebscher, Jürgen (1998). "3-Morpholino-2-Phenylthioacrylic Acid Morpholide and 5-(4-Bromobenzoyl-2-(4-Morpholino)-3-Phenylthiophene". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV9P0099.; Collective Volume, vol. 9, p. 99
- ↑ Trevor W. Hambley, David E. Hibbs, Peter Turner, Siân. T. Howard, Michael B. Hursthouse (2002). "Insights into Bonding and Hydrogen Bond Directionality in Thioacetamide from the Experimental Charge Distribution". J. Chem. Soc., Perkin Trans.: 235-239. doi:10.1039/B109353C.
- ↑ Artis, Dean R.; Lipton, Mark A. (1998). "Conformations of Thioamide-Containing Dipeptides: A Computational Study". J. Am. Chem. Soc. 120: 12200–12206. doi:10.1021/ja982398t.
மேற்கோள்கள்
தொகு.