தரவு பாகுபாடு
தரவு பாகுபாடு என்பது, சேவை வழங்கி, குறிப்பிட்ட தகவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வடிகட்டுவதைக் குறிக்கும். இணைய சமத்துவம் குறித்த அண்மைக்கால விவாதங்களில் முக்கிய விவகாரமாக இது கருதப்படுகிறது. இணைய சமத்துவத்தைக் கருத்தில் கொண்டு தரவு பாகுபாட்டை இரு கோணங்களில் அணுக வேண்டும். ஒன்று வாடிக்கையாளர்களை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் சிக்கனம் வேண்டி செய்யப்படும் பாகுபாடு; மற்றொன்று நேர்மையற்ற வகையில் வணிக நோக்கத்திற்காக செய்யப்படும் ஒருதலை பட்சமான பாகுபாடு. ஒரு பிரிவு வாடிக்கையாளகளுக்கு ஆதரவாகவும் மற்றொரு பிரிவுக்கு எதிராகவும் தரவுகளைப் பகுப்பதைத் தவிர்ப்பதாக, அனைவருக்கும் ஒன்றுபோல் சேவை வழங்குவதாக, ஒன்றுபோல் அணுகக்கூடியதாக பிணையத்தை அமைப்பதே பாரபட்சமற்ற பாகுபாடு வேண்டுவது.[1]
இணைய சமத்துவம்
தொகுபாரபட்சமற்ற சமத்துவமான முறையில் தகவல் போக்குவரத்தை நடத்தும் கொள்கையே இணைய சமத்துவம் என்று குறிப்பிடப்படுகிறது. இது சட்டங்களிலோ நெறிமுறைகளிலோ வரையறுக்கப்படாத கொள்கை மட்டுமே.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bagwell, Dana. "A First Amendment Case For Internet Broadband Network Neutrality". University of Washington. Archived from the original on 11 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 8 Feb 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)