தராலி சர்மா
தராலி சர்மா (Tarali Sarma)(பிறப்பு: ஆகஸ்ட் 4, 1975) அசாமினைச் சார்ந்த பின்னணிப் பாடகர். 2003ஆம் ஆண்டில் அசாமிய திரைப்படமான அகாஷிதோரார் கோத்தாரே படத்தின் மூலம் இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது. இவரது தந்தை பிரபாத் சர்மா, ஓர் நாட்டுப்புற பாட்கர், புல்லாங்குழல் கலைஞர், இசை இயக்குநர் மற்றும் சங்கீத நாடக அகாதமி விருதுப் பெற்றவர். தராலி அசாமிய திரையுலகில் பலதுறை பாடகர் மற்றும் இசை இயக்குநர் ஆவார். ஆகாஷிதோரர் கோத்தரே, லாஸ், ஜாத்ரா தி பாஸேஜ், பசுந்தாரா மற்றும் அபிஜாத்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். அபிக்சரி பிரியா, சோன்ஜோனி, சங்கர் மாதவ், சினே, போஹார், தாராலி, ஹெங்குலியா மற்றும் பார்கிட் போன்ற பல உள்ளிட்ட இசைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தரலியின் தொகுப்புகளில் அபிமான், பிரஜாபதி, நயன்மோனி (கிருஷ்ணமணி நாத்துடன்), முகோலி போன்றவையும் அடங்கும்.
தராலி சர்மா Tarali Sarma | |
---|---|
2005ஆம் ஆண்டு தரலி சர்மாவின் புகைப்படம். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 4 ஆகத்து 1975 |
பிறப்பிடம் | அசாம், இந்தியா |
இசை வடிவங்கள் | அசாமி கிளாசிக்கல், அசாமி நாட்டுப்புறம், |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், இசைக்கலைஞர், இசையமைப்பாளர். |
இசைக்கருவி(கள்) | குரல் |
வெளியீட்டு நிறுவனங்கள் | அதிகம் |
இணையதளம் | taralisarma.com |
அசாம் மாநிலத்தில் 2009இல் அசாம் சொசைட்டி ஆஃப் அமெரிக்காபென்சில்வேனியாவில் ஏற்பாடு செய்த பள்ளத்தாக்கு ஃபோர்ஜில் தராலி சர்மா இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். அசாம் மாநிலத்தில் 2010ஆம் ஆண்டு அசாம் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா ஏற்பாடு செய்த கொலராடோ ஸ்பிரிங்ஸ் நிகழ்ச்சியினை கொலராடோவிலும் நிகழ்த்தினார்.[1] தராலி பிளேர் சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அசாமிய திரைப்படமான “லைஃப் இன் எ பப்பட்” இன் இசை இயக்குநர் தாரலி சர்மா ஆவார்.[2] இத்திரைப்படம் போர்ட் பிளையரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில் பல விருதுகளைப் பெற்றது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற லிப்ட்-ஆப் சீசன்சு திரைப்பட விழாவிலும், இங்கிலாந்து மற்றும் ஹாலிவுட்டின் லிஃப்ட்-ஆஃப் செஷன்ஸ் திரைப்பட விழாவிலும், திரையிட தேர்வு செய்யப்பட்ட அசாமிய திரைப்படமான ‘சுபாலா’ படத்திற்கு இவர் இசை அமைத்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Desk, Sentinel Digital (2019-05-01). "Music is the Sound of a Munificient Soul - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
- ↑ "Assamese film on puppet theatre shines in Port Blair International Film Festival" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
- ↑ "Assamese movie Xubala to be screened at Lift-off Sessions Film Festival in UK, Hollywood" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.