தருமபுரி அரியரநாதர் கோயில்
தருமபுரி அரியரநாதர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் உள்ள சிவன் கோயிலாகும்.
கோயிலின் வரலாறு
தொகுஇக்கோயில் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும் சோழர் ஆட்சிக்காலத்திலும், அதற்குப்பின் போசளர், விஜயநகரப் பேரரசு காலங்களிலும் இக்கோயில் இராசராசீசுவரமுடையார் கோயில் என அழைக்கப்பட்டுவந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கோயிலமைப்பு
தொகுஇக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், அம்மன் திருமுற்றம் முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கற்றளி ஆகும். அம்மனான சௌந்தரநாயகி தனிச்சந்னதி இல்லாமல் மகாமண்டபத்தின் வலப்புறத்தில் தெற்கு நோக்கியவாறு திருமுற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கில் செல்வ விநாயகரும், வடமேற்கில் தண்டாயுதபாணியாக முருகனும் உள்ளனர். [1] இக்கோயிலின் தீர்தமாக கோயிலின் கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சனத்குமார ஆறும், தலமரமாக வில்வமும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 177.