தர்சார் ஏரி
தர்சார் ஏரி (Tarsar Lake) என்பது காசுமீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஏரியாகும். தார் சார் ஏரி என்ற பெயரும் பயன்படுத்தப்படும் பழக்கத்தில் உள்ளது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள அனந்தநாக் மாவட்டம், அரு என்ற சுற்றுலாப் பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. பாதாம் கொட்டை வடிவிலான உற்பத்தித் திறன் குறைந்த அல்பைன் தட்பவெப்ப ஏரி என்று இந்த ஏரி வகைப்படுத்தப்படுகிறது[1][2].
தர்சார் ஏரி Tarsar Lake | |
---|---|
அமைவிடம் | சம்மு காசுமீர், இந்தியா |
ஆள்கூறுகள் | 34°8′24″N 75°8′53″E / 34.14000°N 75.14806°E |
வகை | உற்பத்தி குறைந்த வகை |
முதன்மை வரத்து | பனி உருகுதல் |
முதன்மை வெளியேற்றம் | இலித்தர் ஆறு |
அதிகபட்ச நீளம் | 2 கிலோமீட்டர்கள் |
அதிகபட்ச அகலம் | 0.8 கிலோமீட்டர்கள் |
உறைவு | டிசம்பர் முதல் மார்ச்சு |
புவியியல்
தொகுஅருவுக்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தார்சார் ஏரியில் கோலக்கோய் மலை ஆதிக்கம் செலுத்துகிறது. டாச்சிகம் தேசியப் பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு ஏரியான மார்சார் ஏரியையும் தார்சார் ஏரியையும் குறைந்தபட்சம் 4000 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மலை பிரிக்கிறது [3]. இந்த இரண்டு ஏரிகளையும் ஒன்றாகச் சேர்த்து இரட்டை சகோதரிகள் என்று குறிப்பிடுவர் [4]. 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காசுமீர் மன்னர் யுசுப் சா சாக் என்பவர் அவரது அன்புக்குரியவருக்காக எழுதிய கவிதையில் இந்த இரட்டை ஏரிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
’’என் காதலியின் இரு கூந்தலை நினைக்கும் போதெல்லாம், தர்சார் மற்றும் மார்சரிலிருந்து வரும் நீரோடைகள் போல என் கண்களிலிருந்து கண்ணீர் புறப்பட்டு பெருக்கெடுக்கும்”” [4]}}.
தர்சார் ஏரிக்கு 15 கிமீ தூரத்தில் உள்ள லித்தர்வாட் நகரத்தில் பாயும் லிடர் நதியில் தார்சார் ஏரி கலக்கிறது. மலைவாழிடமான பகல்கம் நகருக்கு அருகிலுள்ள அரு கிராமத்திலிருந்து ஏரிக்குச் செல்லும் மலைப்பாதையில் லித்தர்வாட் அமைந்துள்ளது. இதுவோர் பருவகால குடியிருப்புப் பகுதியாகும். மறுபுறம் மார்சர் ஏரியானது தர்சார் ஏரிக்கு எதிர் திசையில் ஓடி நீரை வெளியேற்றுகிறது [1][3][5]
தாவரங்கள் மற்றும் விலங்கு வளம்
தொகுகுளிர்காலத்தின் போது, தர்சார் ஏரி உறைந்து குளிர்ச்சியாகவும், பனிப்பொழிவால் மூடப்பட்டும் காணப்படுகிறது. கோடை காலத்திலும்கூட இங்கு பனிக்கட்டி மிதக்கிறது. இந்த ஏரியின் பள்ளத்தாக்கு அல்பைன் பூக்களால் சூழப்பட்டிருக்கும். ரோசாவை உள்ளடக்கிய கீயம் என்ற மலரினம், பொட்டென்சில்லா ரோசா இனம், நீல கசகசா, கெண்டியானா என்ற பூக்கும் தாவர பூவினம் போன்றவை பொதுவாக இங்கு காணப்படுகின்றன. வசந்தகாலத்தின் பிற்பகுதியில் எதிசாரம் மலர்கள் ஏரி முழுவதும் சூழ்நது காணப்படுகின்றன[6][7].
பட்டைத்தலை வாத்து, எறும்புண்ணிக் கழுகு உயரப்பறக்கும் சவ்சு எனப்படும் காக்கை இனம், இமயமலையைச் சேர்ந்த பொன்னாங் கழுகு, சின்னமான் மரக்குருவிகள், கருப்புச்சின்னான் உள்ளிட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இனப்பெருக்க காலனிகள் கோடை காலங்களில் இங்கு காணப்படுகின்றன.
தர்சார் மற்றும் இதற்கு அருகிலுள்ள டச்சிங்கம் தேசிய பூங்கா ஆகியவற்றில் காசுமீர் மான், இபெக்சு வகை காட்டாடுகள், நீண்ட வால் மர்மோட் அணில்கள் [8], கத்தூரி மான், பனிச்சிறுத்தை, இமயமலை பழுப்பு கரடி போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.
அணுகும் முறை
தொகுகோடையில் சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் நடுப்பகுதிவரையில் மட்டுமே தர்சார் ஏரியை அணுகவியலும். குளிர்காலத்தில் அதிகப் பனிப்பொழிவு காரணமாக மலைப்பாதைகள் மூடப்படுகின்றன. சிறீநகரில் இருந்து 102 கி.மீ தொலைவிலுள்ள சாலை வழியாக அனந்தநாக் மற்றும் பகல்கம் வழியாக அரு மலையேற்ற முகாமை சென்றடையலாம்.
ஏரிக்குச் செல்லும் மலைபாதையின் பாதி தூரமான இரண்டு நாள் பயணத்தில் லித்தர்வாட்டின் ஆல்பைன் பசும்புல் நிலம் இருக்கிறது. பெரும்பாலான மலையேற்றப் பயணிகளுக்கு இவ்விடம் அடிப்படை முகாமாக விளங்குகிறது. இதே பயணவழியில் ஒருவரால் ஏரிக்குச் சென்று பார்த்துவிட்டு அன்றைய தினத்திலேயே அடிப்படை முகாமிற்கு வந்துவிட முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dr Shiv Sharma (2008). India—A Travel Guide. Diamond Pocket Books (P) Ltd. pp. 209–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128400674.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Parmanand Parashar (2004). Kashmir The Paradise Of Asia. Sarup & Sons, 2004. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176255189. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
- ↑ 3.0 3.1 S. Maqbul Ahmad (1984). Historical geography of Kashmir: based on Arabic and Persian sources from A.D. 800 to 1900. Ariana Pub. House, 1984. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176487863. பார்க்கப்பட்ட நாள் 16 December 2012.
- ↑ 4.0 4.1 S. L. Sadhu (2004). Eng Hali (15). Sahitya Akademi. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126019540.
- ↑ "Pahalgam page JKTDC". jktdc.in. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-12-06.
- ↑ S. R. Bakshi (1997). Kashmir: History and People Volume 1 of Kashmir Through Ages. Sarup & Sons. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185431963.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Michael Shaw (2008). In Search of Time Wasted: Peregrinations from Seil Island. AuthorHouse. pp. 117–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781434344434.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Valmik Thapar (1977). Land of the Tiger: A Natural History of the Indian Subcontinent. University of California Press. pp. 32–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520214705.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)