தர்பாரா சிங் (சபாநாயகர்)

தர்பாரா சிங் (சபாநாயகர்) (Darbara Singh (speaker)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1927-1998 ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். பஞ்சாப் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகராகவும் அறியப்படுகிறார்.[3]

தர்பாரா சிங்
Darbara Singh
பஞ்சாப் சட்டமன்றத்தின் அவைத் தலைவர்
பதவியில்
14 மார்ச்சு 1969 – 3 செப்டம்பர் 1973
முன்னையவர்இய்யொகிந்தர் சிங் மான்
பின்னவர்கேவல் கிருசன்
தொகுதிநாகோதர் சட்டமன்ற தொகுதி
உறுப்பினர் மக்களவை (இந்தியா)[1]
பதவியில்
1996–1998
முன்னையவர்உமாராவ் சிங்
பின்னவர்ஐ.கே.குச்ரால்
தொகுதிசலந்தர்
இராசத்தான் ஆளுநர்[2]
பதவியில்
1 மே 1998 – 24 மே 1998
முன்னையவர்பாலி ராம் பகத்
பின்னவர்நவரங் லால் திப்ரெவால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 பிப்ரவரி 1927
பைசலாபாத், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது பாக்கித்தான்)
இறப்பு24 மே 1998 (வயது 71)
அரசியல் கட்சிசுயேச்சை (1972வரை)
இந்திய தேசிய காங்கிரசு (1972 முதல் 1996)
சிரோமணி அகாலி தளம் ( 1996-1998)
துணைவர்பிரப்சோத்து கவுர்
பெற்றோர்மங்கல்சிங்

தர்பாரா சிங் 1967 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1972 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை துணை அமைச்சரானார். 1969 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகரானார்.

1996 ஆம் ஆண்டில் இவர் மக்களவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] ஆனால் 1998 ஆம் ஆண்டில் இந்தர் குமார் குச்ராலுக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுத்தார். மேலும் அவர் இராசத்தானின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[5] 1998 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று சில நாட்களுக்குப் பிறகு பதவியில் இருக்கும்போதே இவர் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பாரா_சிங்_(சபாநாயகர்)&oldid=3816208" இலிருந்து மீள்விக்கப்பட்டது