தர்மபத்தினி (1941 தெலுங்கு திரைப்படம்)

தர்மபத்தினி (Dharmapatni) பி. புள்ளையா இயக்கத்தில், 1941 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படமாகும். பி. புள்ளையா தயாரிப்பில், திமிர் பரன் மற்றும் அனாசாஹிப் மணிகர் இசை அமைப்பில், 10 ஜனவரி 1941 ஆம் தேதி வெளியானது. பானுமதி, பி. சாந்தகுமாரி, ஹேமலதா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் தனது 17ஆம் வயதில் அறிமுகமான முதல் திரைப்படமாகும். அலூரி சக்ரபாணி அவர்களுக்கும் இது முதல் படமாகும்.[1][2][3]

நடிகர்கள்தொகு

பானுமதி, பி. சாந்தகுமாரி, ஹேமலதா, அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஹனுமந்த ராவ், ரல்லபண்டி குடும்ப ராவ், ஆச்சாரி, ஆதிநாராயணா, ராஜு, சலபதி ராவ், நரிமணி, சுஷீலா, மாஸ்டர் குமார், பேபி லட்சுமி.

கதைச்சுருக்கம்தொகு

ஐந்து வயதான ராதாவின் தாய் இறக்கும் தருவாயில் ராதாவை பார்த்துக்கொள்ளுமாறு தேவதாசி ஸ்ரீதேவியிடம் ஒப்படைக்கிறார். ஒரு குடும்பப்பெண்ணின் அனைத்து நல்லொழுக்கங்களை ஸ்ரீதேவி ராதாவிற்கு கற்றுக்கொடுக்கிறாள். பள்ளியில் பயிலும் ராதா, மோகன் என்ற மாணவனுடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. ஒரு கோவிலில் இறைவனுக்கு முன்னால், ராதா தான் தன் மனைவி என்று சத்தியம் செய்கிறான் மோகன். ஒழுக்கமற்ற ஆனந்த ராவ், மோகனின் காதலை அவனின் தந்தையிடம் சொல்லிவிடுகிறார். அதன் பின்னர், பணக்கார குடும்பத்தை சேர்த்து உமாவை திருமணம் செய்யுமாறு மோகனின் தந்தை அவனை வற்புறுத்தினார். ராதாவை பற்றி தெரியவந்த உமா, மோகனை விட்டு விலகிவிடுகிறாள். ஆனந்த ராவால் பாதிக்கப்பட்ட லீலா, உமாவை காப்பாற்றுகிறாள். அதனால், லீலாவை ராவ் கொல்ல, பழி மோகன் மேல் விழுகிறது. மோகன் தப்பித்தானா? ராதா-மோகன் காதலுக்கு என்னவானது போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவுதொகு

இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர்கள் திமிர் பரன் மற்றும் அனாசாஹிப் மணிகர் ஆவர். கோபாலம் மற்றும் லக்ஷ்மிகாந்தம் ஆகியோர் படத்தின் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.

தயாரிப்புதொகு

எழுத்தாளர் விஷ்ணு சங்கரம் எழுதிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்ட படமாகும். கதாநாயகன் ஹனுமந்த் ராவ், பிரபல நாடக நடிகர் உப்புலுரி சஞ்சீவ ராவ் அவர்களின் மகன் ஆவார். அனாசாஹிப் இசை அமைத்த ஒரே தெலுங்கு படம் இதுவாகும்.

வெளி-இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "http://www.telugucinema.com/".
  2. "http://www.cinegoer.com".
  3. "http://www.thehindu.com".