தர்மவரம் நகராட்சி
தர்மவரம் நகராட்சி (Dharmavaram Municipality) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் அமைந்துள்ள தர்மவரம் நகரில் செயல்படும் தன்னாட்சி உள்ளாட்சி அமைப்பாகும். இது தேர்வு தர நகராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
உருவாக்கம் | 1964 |
---|---|
ஒன்றிணைந்தது | மாநகராட்சி |
வகை | உள்ளாட்சி அமைப்பு |
நோக்கம் | குடிமைப் பணி |
தலைமையகம் | தர்மவரம் |
தலைமையகம் | |
ஆட்சி மொழி | தெலுங்கு மொழி |
நகராட்சி ஆணையர் | மல்லிகார்ஜூனா |
மைய அமைப்பு | குழு |
வரலாறு
தொகுதர்மவரம் நகராட்சி 1964-இல் உருவாக்கப்பட்டது. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கடிரி நகராட்சியும் இதனுடன் உருவாக்கப்பட்டது.[1]
நிர்வாகம்
தொகுதர்மவரம் நகராட்சி 40.45 சதுர கி. மீ. பரப்பளவில் பரவியுள்ளது. மேலும் இந்நகராட்சியில் 40 பகுதிகள் உள்ளன.[1][2] நகராட்சியின் தற்போதைய தலைவர் லிங்கம் நிர்மலா ஆவார்.[3]
விருதுகள் மற்றும் சாதனைகள்
தொகு2015ஆம் ஆண்டில், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சேவைகள் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தின் 31 நகரங்களில் இதுவும் ஒன்றாகும், இது அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[4] 2015ஆம் ஆண்டில், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தூய்மை இந்தியா இயக்கத்தின் படி, தர்மவரம் நகராட்சி நாட்டில் 224ஆவது இடத்திலிருந்தது.[5]
மேலும் காண்க
தொகு- ஆந்திராவில் உள்ள நகராட்சிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
- ↑ "Dharmavaram Municipal Corporation". dharmavarammunicipality.org. Archived from the original on 17 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-04-07.
- ↑ "Contact Details of Commissioners and Mayors of Amrut Cities" (PDF). Atal Mission for Rejuvenation and Urban Transformation. Government of India. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ Vadlapatla, Sribala (11 August 2015). "Amaravati among 31 AP cities selected for Amruth development". The Times of India (Hyderabad). http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Amaravati-among-31-AP-cities-selected-for-Amruth-development/articleshow/48431080.cms. பார்த்த நாள்: 18 December 2015.
- ↑ Sandeep Kumar, S (10 August 2015). "Small towns fare better in Swachh Bharat rankings". The Hindu (Vijayawada). http://www.thehindu.com/news/cities/Vijayawada/small-towns-fare-better-in-swachh-bharat-rankings/article7520320.ece. பார்த்த நாள்: 30 March 2016.