தர்மானந்த தாமோதர் கோசாம்பி
ஆச்சாரிய தர்மானந்த தாமோதர் கோசாம்பி (அக்டோபர் 9, 1876- ஜூன் 24, 1947). இந்தியாவின் பௌத்த பேரறிஞர்களில் ஒருவர்.[1] பாலி மொழி அறிஞர். மார்க்ஸிய வரலாற்றறிஞரான டி.டி.கோசாம்பியின் தந்தை ஆவார்.
வாழ்க்கை வரலாறு
தொகுகோவாவின் ஷங்வால் கிராமத்தில் 1876 ல் பிறந்தார். பதினாறுவயதில் பாலாபாயை மணம்புரிந்துகொண்டார். துறவுபூண்டு ஞானம் தேடிப்போக வேண்டுமென ஆசை இருந்தாலும் பலமுறை அதற்கு முயன்று திரும்பி வந்தார். முதல் குழந்தையான மகள் மாணிக் பிறந்ததும் துறவியாக கிளம்பி நான்குவருடம் வரை திரும்பி வரவில்லை. பௌத்தம் மீது ஈடுபாடு கொண்ட கோஸாம்பி பௌத்தமும் பாலியும்பயில வாரணாசியிலும் கல்கத்தாவிலும் அலைந்தார். பின் இலங்கை சென்று அங்கே பௌத்தம் கற்று 1902ல் பௌத்த துறவியானார். பின்னர் பர்மா சென்று பர்மிய இலக்கியம் பௌத்தம் பற்றி ஆராய்ச்சி செய்தார்.
பின்னர் இந்தியா திரும்பிய கோசாம்பி கல்கத்தா பல்கலையில் பேராசிரியராக பணியாற்றலானார். 1907ல் அவருக்கு தர்மானந்த கோஸாம்பி பிறந்தார். பின்னர் கல்கத்தாவில் இருந்து பரோடா சென்று பௌத்தத்தில் ஆய்வுசெய்தார். பௌத்தம் பற்றிய சொற்பொழிவுகளைச் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக புனே ஃபெர்குஸன் கல்லூரியில் சேர்ந்தார்
மும்பையில் கோசாம்பி ஹார்வார்ட் பல்கலையைச்சேர்ந்த முனைவர் ஜேம்ஸ் வுட் ஐ சந்தித்தார். அவர் சம்ஸ்கிருதம், அர்த்தமாகதி மற்றும் பாலி மொழிகள் கற்பதற்காக வந்திருந்தார். வுட்டின் அழைப்பை ஏற்று கோஸாம்பி ஹார்வார்டு சென்றார். அங்கே விசுத்திமார்க என்ற தன்னுடைய புத்த தத்துவ நூலை முடித்தார். ஹார்வார்டில் கோஸாம்பின் ரஷ்யமொழி கற்றார். மார்க்ஸியத்தில் ஈடுபாடுகொண்டார். 1929ல் ரஷ்யாவுக்குச் சென்றார். 1929ல் லெனின்கிராட் பல்கலையில் பாலி மொழி ஆசிரியராக பணியாற்றினார்
இந்திய சுதந்திரப்போர் உச்சமடைந்தபோது கோசாம்பி இந்தியா திரும்பினார். குஜராத் பல்கலையில் ஊதியமில்லா பேராசிரியராக பணியாற்றினார். காந்திய போராட்டத்தில் ஈடுபாடு கொண்டார். உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். 6 வருட சிறைவாசம் அவரது உடல்நலத்தை பெரிதும் சீரழித்தது
முனைவர் அம்பேத்காருடன் கோசாம்பிக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. அம்பேத்கார் பௌத்ததுக்கு மதம் மாறியதற்கு கோசாம்பி ஒரு முக்கியமான காரணம்
கோசாம்பிக்கு சமண மதத்திலும் ஆழமான ஈடுபாடு இருந்தது. பஹுஜனவிகாரம் என்ற அமைப்பை அவர் நிறுவினார். பௌத்த துறவிகள் தங்குவதற்கான இடமாக இது அமைந்தது. இன்றும் செயல்பட்டு வருகிறது. சமண மத பாதிப்பினால் சல்லேகனை [உண்ணாநோன்பு, வடக்கிருத்தல் என்று தொல்தமிழ் சொல்] இருந்து உயிர்துறக்கமுடிவு செய்தார்
ஆனால் மகாத்மா காந்தி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. வார்தா ஆசிரமத்துக்கு வந்து தன்னுடன் தங்கும்படி காந்தி அவரை அழைத்தார். ஆனால் வார்தாவில் உள்ள சேவா கிராம் ஆசிரமத்தில் தங்கியும் கோசாம்பி தன் உண்ணாநோன்பை கைவிடவில்லை. ஒரு நாள் ஒரு கரண்டி பழச்சாறு மட்டும் அருந்தியபடி அவர் தொடர்ந்து வாழ்ந்தார். 1947 ஜூன் மாதம் உயிர்துறந்தார். காந்தி கோஸாம்பிக்காக ஒரு சிறப்பு அஞ்சலிக்கூட்டத்தை நடத்தினார்
நூல்கள்
தொகு- பகவான் புத்தர் [தமிழில் வந்துள்ளது. சாகித்ய அக்காதமி வெளியீடு]
- நிவேதன் [சுயசரிதை]
- பௌத்தம் குறித்து கோசாம்பி எழுதிய ஆய்வுகள் 12 நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- article in Caravan Magazine
- Nivedan - Dharmanand Kosambi's Autobiography பரணிடப்பட்டது 2015-06-10 at the வந்தவழி இயந்திரம் translated and edited by Meera Kosambi
- Website devoted to Dharmanandji's literature maintained by Yashwantrao Chavan Pratishthan, Mumbai
- The making of an Indologist on Frontline
- Dileep Padgaonkar (Sep 25, 2010). "Scholars Extraordinary". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/Scholars-Extraordinary/articleshow/6621118.cms.