தர்மா குமார்
தர்மா குமார் (மார்ச்சு 1928–19,அக்டோபர் 2001) ஓர் பொருளியல் வரலாற்றாசிரியர், பேராசிரியர், நூலாசிரியர் ஆவார்.[1]
இளமைக்காலமும் கல்வியும்தொகு
தர்மா தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடராமன் என்பவரின் மகள் ஆவார். லாகூரிலும், மும்பையிலும் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பொருளியல் இளங்கலைப் படிப்பை மும்பை எல்பின்ட்சுடோன் கல்லூரியிலும், பொருளியல் முதுகலையைக் கேம்பிரிச்சிலும் முடித்தார்.
பணிகள்தொகு
1948 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பியதும் ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். 1951 இல் லோவ்ராஜ் குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா குமார் என்ற மகள் உண்டு. உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சிலில் சில காலம் வேலை செய்தார். பின்னர் 1966 ஆம் ஆண்டில் தில்லி பொருளியல் பள்ளியில் பேராசிரியராகச் சேர்ந்தார். ஒய்வு பெறும் வரை அங்குப் பணியாற்றினார்,.
எழுத்துப் பணிகள்தொகு
தென்னிந்தியாவில் நிலமும் சாதியும் என்ற பெயரில் நூல் எழுதி வெளியிட்டார். இந்த நூலுக்கு எல்லென் மெக்கார்தர் பரிசு கிடைத்தது. இந்தியப் பொருளாதார சமூக வரலாறு ரிவியூ என்னும் இதழுக்குப் பதிப்பாசிரியராக இருந்தார். தனிமனித உரிமைகள், சமயச் சார்பின்மை, சனநாயக உரிமைகள் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் இருந்தார். பொருளியல், சமூகவியல், ஆகிய இரண்டையும் உள்ளடக்கி இவருடைய ஆய்வுகள் விளங்கின. இந்தியா மற்றும் அயல் நாடுகளின் பல்கலைக் கழகங்களின் கருத்தரங்குகளில் உரையாற்றினார்.
மேற்கோள்தொகு
மேலும் பார்க்கதொகு
http://www.thehindu.com/mag/2001/11/04/stories/2001110400120200.htm