தற்செயலான பிடிப்பு

மீன்பிடித்தலில், தற்செயலான பிடிப்பு (incidental catch) என்பது தற்செயலாக பிடிக்கப்பட்ட ஆனால், தக்கவைக்கப்பட்ட பிடிப்பின் பகுதியைக் குறிக்கிறது. இது நிராகரிப்புகளிலிருந்து வேறுபடுத்தப்படலாம், அதாவது திட்டமிடப்படாத பிடிப்புகளின் வழியாக கிடைக்கப்படுபவற்றில் சில பிடிக்கப்பட்டு பின்னர் கடலிலேயே திருப்பி விடப்படுகின்றன. மேலும் இலக்கு வைக்கப்பட்ட உயிரினங்களுடன் பிடிபட்ட அனைத்து இலக்கு அல்லாத உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு துணை வகை மீன் பிடிப்பு ஆகும்.இது அப்புறப்படுத்துதலுக்கு (discards) எதிர்மறை, இதில் ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்படாத பிடிப்பை பிடித்துவிட்டால் திருப்பி கடலில் விடப்படும். மூலப்பிடிப்பு (bycatch) என்பது நிர்ணயிக்கப்பட்ட இனங்களுடன் மற்ற இனங்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது.

மூலப்பிடிப்பு = தற்செயலான பிடிப்பு + அப்புறப்படுத்தப்பட்ட பிடிப்பு

தற்செயலான பிடிப்பு மற்றும் இதர பிடிப்புகளை உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வரையறுத்துள்ளது.[1]:

  • நிர்ணயிக்கப்பட்ட பிடிப்பு: ஒரு குறிப்பிட்ட கடல்வாழ் உயிரினங்கள் கூடும் இடத்தில் பிடிப்பை குறிக்கிறது, எடுத்துக்காட்டு இறால்.
  • தற்செயலான பிடிப்பு: நிர்ணயிக்கப்படாத பிடிப்பைத் தக்கவைத்தல்.
  • அப்புறப்படுத்தப்பட்ட பிடிப்பு: பொருளாதாரம், அரசியலமைப்பு மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக பிடிப்பட்டதில் ஒரு பகுதி திருப்பி கடலுக்குள் விடப்பட்டுதல்.
  • மூலப்பிடிப்பு: தற்செயலான பிடிப்பு மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட பிடிப்பின் கூட்டு.

மேற்கோள்கள்

தொகு
  1. Alverson DL, MH Freeberg, SA Murawski and Pope JG (1994) A global assessment of fisheries bycatch and discards FAO Fisheries, Technical paper 339, Rome. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-5-103555-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்செயலான_பிடிப்பு&oldid=4047587" இலிருந்து மீள்விக்கப்பட்டது