தலாரி மனோகர்
தலாரி மனோகர் (TalariManohar) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1954 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்த இவர் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். பிற்காலத்தில் பிரசா இராச்சியம் கட்சியில் சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சித்தூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கிய மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் நாரா சந்திர பாபு நாயுடுவின் சமகாலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரசா இராச்சியம் கட்சியின் இணைப்பு காரணமாக, தலாரி மனோகர் இப்போது இந்திய தேசிய காங்கிரசில் உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ TALARI MANOHAR - PRAP - Chittoor (ANDHRA PRADESH) Association for Democratic Reforms website, accessed: 13 January 2011