தலைகீழ்த் தலை நாலணா
தலைகீழ்த் தலை நாலணா என்பது அஞ்சல்தலை சேகரிப்பாளர்களால் பெறுமதியானதாகக் கருதப்படும், இந்தியாவில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை ஆகும். 1854ன் இந்தியாவின் முதல் வெளியீடுகள் சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களில் அமைந்த நாலணா பெறுமதியான அஞ்சல்தலையையும் உள்ளடக்கியிருந்தது. ஆனாலும், இவற்றின் உற்பத்தியின்போது சில அஞ்சல்தலைகளில் தலைகீழ் வழு ஏற்பட்டது. இவற்றில் அரசியின் தலை தலைகீழாக அச்சாகியிருந்தது. இது உலகின் முதல் பல நிற அஞ்சல்தலைகளுள் ஒன்று. பாசெல் புறா அஞ்சல்தலை இதற்கு 9 ஆண்டுகள் முற்பட்டது.
தலைகீழ் தலை நாலணா | |
---|---|
உற்பத்தியான நாடு | இந்தியா |
உற்பத்தி அமைவிடம் | நில அளவை அலுவலகம், கல்கத்தா |
உற்பத்தியான தேதி | 1854 |
எப்படி அருமை | தலைகீழ் வழு |
இருப்பு எண்ணிக்கை | 27[1] |
முகப் பெறுமானம் | நான்கு அணாக்கள் |
நாலணா அஞ்சல்தலைகள்
தொகுநாலணா அஞ்சல்தலைகள் கல்கத்தாவில் இருந்த நில அளவை அலுவலகத்தினால் அச்சிடப்பட்டது. சட்டத்துக்கு சிவப்பும், தலைக்கு நீல நிறமும் பயன்படுத்தப்பட்டன. இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. அச்சடிக்கும்போது, முதலில் தாளில் சிவப்புநிற சட்டம் அச்சிடப்பட்டது. பின்னர் மேற்படி சட்டத்துக்குள் நீலநிறத்தில் தலை அச்சிடப்பட்டது. முதல் அச்சுப்பதிவு 1854 அக்டோபர் 13ல் தொடங்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Stanley Gibbons, Commonwealth Stamp Catalog: India 4th ed. (2013)