தலைகீழ் நுண்நோக்கி

தலைகீழ் நுண்நோக்கி என்பது ஒளி மூலம் மற்றும் ஒளி ஒடுக்கி (Condenser) ஆகியவை மேலேயும், வில்லைத் தொகுப்பு (Lens System) கீழேயும் உள்ள அமைப்பு ஆகும்.

திசு வளர்ப்பு பரிசோதனையில் பயன்படும் தலைகீழ் நுண்ணோக்கி

இது 1850 ஆம் ஆண்டில் துலான் பல்கலைக்கழகத்தின் (முன்னர் லூசியானாவின் மருத்துவக் கல்லூரி என பெயரிடப்பட்டது) பேராசிரியரான சே. லாரன்சு சுமித்தால் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

உருவாக்கும் விதம்தொகு

தலைகீழ் நுண்ணோக்கியின் மூலம் காணும் மாதிரி வைக்கும் மேடை நிலையாக (Stage) நகராமல் இருக்கும். வில்லைத் தொகுப்பின் பொருளருகு வில்லையின் குவிய தூரம்  மட்டுமே செங்குத்து அச்சில் சரிசெய்யப்படுகிறது. குவிய தூரத்தை மிக துல்லியமாக சரி செய்ய இரட்டைக் குமிழ் திருகு ஒன்று உள்ளது.

நுண்ணோக்கியின் அளவைப் பொறுத்து, வேறுபட்ட உருப்பெருக்கங்களையுடைய நான்கு முதல் ஆறு பொருளருகு  வில்லைகளைத் தேவைக்கேற்ப சுழற்றி பொருத்துமாறு  ஒரு அமைப்பு உள்ளது. நுண்ணோக்கியுடன் ஒரு காணொளி கருவி (Video camera),  உடனொளிர்தல் கருவி (Fluorescence illumination), பொதுக்குவிய வரியோட்டக் கருவி (Confocal scanning) இதனுடன் இன்னும் சில கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளது

உயிரியல் பயன்பாடுகள்தொகு

வழக்கமான நுண்ணோக்கியில் ஒரு கண்ணாடி படவில்லை (Slides) வழியாகவே உருப்பெருக்கம் காணப்படுகிறது. தலைகீழ் நுண்ணோக்கிகள், ஒரு பெரிய கொள்கலனில் வைக்கப்பட்டுள்ள உயிருள்ள செல்கள் அல்லது உயிரினங்களைக் காண்பதற்கு பயன்படுகிறது. (உதாரணம்: திசு வளர்ப்பு கொள்கலன்)  எடுத்துக்காட்டாக காசநோய் நுண்ணுயிரிகள் எவ்வகை மருந்துகளுக்கு கட்டுப்படுகின்றது போன்று, நேரடியாக பார்க்க வேண்டிய  உருப்பெருக்கங்களைக் காண உதவுகிறது

நுண்ணியக்குமுறைதொகு

தலைகீழ் நுண்ணோக்கியை நுட்பமாக இயக்க  மிகச் சிறிய உட்கருவிகள் உள்ளன. இவை மாதிரிகளை துல்லியமாகக் காண உதவுகின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. Smith JL (1852). "The inverted microscope-a new form of microscope". Am J Sci Arts 14: 233–241. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைகீழ்_நுண்நோக்கி&oldid=2749095" இருந்து மீள்விக்கப்பட்டது