தலையாறு அருவி

தமிழ்நாட்டு அருவி

தலையாறு அருவி (Thalaiyar Falls, அல்லது Rat Tail Falls) என்பது தமிழ்நாட்டின், தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஒரு அருவியாகும். இது 975 அடி (297 மீ) உயரமான தமிழ்நாட்டின் உயரமான அருவியாகவும், இந்தியாவின் ஆறாவது உயர்ந்த அருவியாகவும், உலகின் 267வது உயர்ந்த அருவியாகவும் உள்ளது.[1] கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

தலையாறு அருவி
தலையாறு அருவி (எலிவால் அருவி)
Map
அமைவிடம்தேவதானப்பட்டி
ஆள்கூறு10°13′25″N 77°35′54″E / 10.22361°N 77.59833°E / 10.22361; 77.59833
வகைபுவியில் காணப்படுவது
ஏற்றம்820 மீட்டர்கள் (2,690 அடி)
மொத்த உயரம்975 அடி (297 m)
வீழ்ச்சி எண்ணிக்கைஒற்றை
நீர்வழிமஞ்சளாறு
உயரம், உலக நிலை267, இந்தியா: #3

விளக்கம் தொகு

வானம் தெளிவாக இருக்கும் நாளில், கொடைக்கானல் காட்டுச் சாலையில் உள்ள டம் டம் பாறையில் இருந்து மேற்கே 3.6 கிலோமீட்டர் (2.2 மைல்) தொலைவில் உள்ள இது நன்கு தெரியும். கருப்பு பாறை குன்றின் பின்னணியில் நீர் வழிந்து கொட்டுவது ஒரு நீண்ட மெல்லிய வெள்ளை துண்டு போன்று பள்ளத்தாக்கு முழுவதும் தோன்றும்.

அருவியின் மேல் விளிம்பில் குறைந்த உயரமுள்ள கான்கிரீட் தடுப்புகளால் அருவி நீர் கொட்டுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அருவி வால் வடிவத்தில் செறிவாக விழ ஏதுவாகிறது. சுவரை ஒட்டி நடந்து சென்றால் அருவியின் மையம் அருகே செல்ல இயலும். சுவரின் கீழே ஒரு பெரிய தட்டையான பாறை 5 அடி (1.5 மீ) அகலமும் கொண்டதாக உள்ளது. ஒரு காட்டு வழியாக கீழே செல்லும்போது அமைதியாக தொடர்ந்து கீழ்நோக்கி செல்லும் ஒரு சிறிய நதியாக அருவியைப் பார்க்க இயலும் கீழே சென்றபின் பின்புறம் அண்ணாந்து பார்த்தால், நீர் பெரும் சரிவில் அமைதியாக வருவதை, பார்க்க முடியும். அருவி கீழே விழும் இடத்தில் அவ்வளவாக சத்தம் இல்லை. ஒரே இரைச்சல் என்றால் அது அருகில் உள்ள கற்பாறைகளில் இருந்து வரும் சிறிய அருவிகளின் சலசலக்கும் ஓசை மட்டுமே.[2]

அருவியில் வரும் நதி நீர், பெருமாள் மலை கிராமத்தின் ஊடாக 9 கி.மீ. (5.6 மைல்) கீழே வருகிறது. தண்ணீரை பார்க்க சுத்தமானதான தோன்றினாலும், அது மாசுபட்டதாக இருக்கலாம் என்றும், பார்வையாளர்கள் அதை குடிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அணுகல் தொகு

 
மஞ்சளாறு அணை (இடது)
மஞ்சளாறு நீர்தேக்கம்- 2.1 கிலோமீட்டர்கள் (1.3 mi) நீளம் (மையம்)
மஞ்சளாறு (வலது).
தலையாறு அருவி பகுதி 2.8 கிலோமீட்டர்கள் (1.7 mi) மேலும் வலது.

தலையாறு அருவி, சாதாரணமாகப் பொதுமக்கள் அணுக இயலாததாக கருதப்படுகிறது. அருவிக்குச் செல்ல எந்தச் சாலையும் இல்லை. அருவியின் உச்சிக்குச் செல்வதென்பது சவாலான இலக்கு ஆகும்.[2] இரு மேலைநாட்டுச் சுற்றுலா பயணிகள் மலை ஏறும்போது 2006 ஆண்டு விழுந்து இறந்துபோனார்கள். இதனால் மலையேறிகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.[3]

மஞ்சளாறு அணைப் பகுதியில் இருந்து கோடைக்காலத்தில் அருவியின் அடிவாரம்வரை செல்வது சாத்தியம். இந்த நெடுந்தொலைவு மலை ஏற்றத்தின் பாதையில் மாந்தோப்புகளும், உருளைக் கிழங்கு தோட்டங்களும் மஞ்சளாறு நீர்தேக்கத்தைச் சுற்றியும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்து மேலே சென்றால் இறைவி காமாட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாய்ந்துவரும் ஓடை சிறியதாக பளபளத்து தெரியும். இங்கு நிலவும் தொன்மத்தின்படி இங்குள்ள ஒரு மூங்கில் புதரில் அருவி அடிவாரத்தில் காமாட்சி பிறந்தார் என்றும் இதனாலேயே அவர் ”மூங்கிலணை காமாட்சி” என அழைக்கப்படுகிறார் எனவும் கருதப்படுகிறது. இந்த இடம் அம்மா மச்சு என அழைக்கப்படுகிறது. இதன்பொருள் தேக்கு மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பின் நடுவில் என்பதாகும்.

இந்த இடத்தில் இருந்து ஓடை வழியாக மேலே ஏற வேண்டும். சிரமப்பட்டு மேலே ஏறினால் அருவியின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சுற்றிலும் பெரிய பெரிய கற்பாறைகளும், சுமார் 60 மீட்டருக்கு (200 அடி) 30 மீட்டர் (98 அடி) அளவிலான குளமும் உள்ளது. திரும்பி போவதும் மிகவும் கடினமான செயலாகும். முழுமையாக ஏறி இறங்கிவர ஆகும் தொலைவு சுமார் 15 கிலோமீட்டர் (9.3 மைல்) ஆகும். மேலும் இதற்கு ஒரு முழு நாள் ஆகும்.[3]

மஞ்சளாறு அணை என்பது மஞ்சளாறு சாலையின் முடிவில் 5.5 கிலோமீட்டர் (3.4 மைல்) தொலைவில் மாநில செடுஞ்சாலை-36 சாலையின் வடக்கில் உள்ளது. தேவதானப்பட்டி ஊரில் இருந்து காமாட்சியம்ன் கோயிலுக்கு சாலை செல்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. World Waterfall Database, World's Tallest Waterfalls பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 Purdy, Strother (2006), "Hike description", Mondaugen's Law 
  3. 3.0 3.1 Purdy, Strother (11-12-2007).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையாறு_அருவி&oldid=3629580" இலிருந்து மீள்விக்கப்பட்டது