தலைவன்கோட்டை
தலைவன்கோட்டை என்ற ஊரானது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவகிரி வட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்த 72 பாளையங்களில் தலைவன்கோட்டையும் ஒரு பாளையமாக அங்கீகரிக்கப்படுகின்றது.
பாளையக்காரா் காலம்
தொகுதலைவன்கோட்டைப் பாளையக்காரர்கள் மறவா் குழுவில் கொண்டையன்கோட்டை பிரிவை சாா்ந்தவா்கள். பிற்கால பாண்டிய மன்னா்களின் அவையில் அலுவலா்களாக இருந்ததாக இவா்களின் தோற்றம் பற்றி அறியப்படுகிறது. கி.பி. 1754 - 1762 வரை நெற்கட்டும் சேவலை ஆண்ட பூலித்தேவன் கூட்டணியில் இப்பாளையம் இணைந்தது. இப்பாளையக்காரா்கள் கொல்லம்கொண்டான் பாளையக்காரா்கள் தலைமையில் இணைந்து கலகத்தில் ஈடுபட்டு ஆங்கில நவாப் படையை வென்றது, மற்ற பாளையக்காரா்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சி செய்ய வழி வகை செய்தது.
1799 ஆம் ஆண்டு நடந்த முதல் பாளையப்போரின் முடிவில் தலைவன்கோட்டையின் பாளையக்காரா் தனது இரண்டு கோட்டைகளையும் 100 படை வீரா்களையும் மேஜா் ஜெ. பேனா்மனிடம் ஒப்படைத்துச் சரணடைந்தார்.
நிலக்கிழார் காலம்
தொகு19 ஆம் நூற்றாண்டில் இப்பாளையம் ஜமீந்தாரிய முறைக்கு மாற்றமடைந்து 3117 மக்கள்தொகையை உள்ளடக்கிய 18 கிராமங்களைக் கொண்டதாக இருந்தது. 1802 ஆம் ஆண்டு நிலத்தீர்வை முறையின்படி சிவானுத்தேவா் என்பவர் ஐந்து கிராமங்களைக் கொண்டிருந்தார்.
இச்சந்ததியில் கடைசி ஜமீந்தார் பட்டத்துடன் இருந்த இந்திரன் இராமசாமி பாண்டியன் உள்ளுா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்களால் மதிக்கப்பட்டாா். இந்திரன் இராமசாமி பாண்டியன் 1944 ஆம் ஆண்டு இராமனாத சேதுபதியின் மகளான இளவரசி சிவபாக்கிய நாச்சியாரை மணந்தாா். இத்தம்பதியினர் மூன்று ஆண், இரண்டு பெண் என ஐந்து குழந்தைகளைப் பெற்றனர். இவா்களது வாரிசுகள் தலைவன்கோட்டையில் உள்ளனா். இக்குடும்பத்தினா் தலைவன்கோட்டையைச் சுற்றியுள்ள கோவில்களை குறிப்பாக தாருகாபுரம் மத்தியஸ்தனாா் கோவிலை நிருவகித்து வருகின்றனர்.
சான்றுகள்
தொகு- டாக்டர் ஜே. தியாகராஜன் எழுதிய “தமிழக வரலாறு” பக்கம்-61.
- N. Subrahmanian (1977). History of Tamilnad. Koodal Publishers. p. 220. (ஆங்கில மொழியில்)