தள வளைவரை
கணிதத்தில் தள வளைவரை அல்லது தள வளைகோடு (plane curve) என்பது ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்திலமைந்த வளைகோடாகும். அத்தளமானது யூக்ளிடிய தளம், கேண்முறைத் தளம் (affine plane) அல்லது வீழ்ப்புவழித் தளமாக (projective plane) இருக்கலாம். பெரும்பாலும் ஆய்வு செய்யப்படும் தள வளைவரைகள் இழைவான சீர் வளைவரைகளும் ( smooth curve) இயற்கணித தள வளைவரைகளுமாகும்.
சீரான தளவளைவரை
தொகுசீரான தள வளைவரை என்பது மெய் யூக்ளிடிய தளம் R2 இல் அமைந்ததொரு வளைவரையாகும். இது ஒருபரிமாண சீர் பன்மடியாக இருக்கும்.
அதாவது சீரான தளவளைவரையானது, ஒரு கோட்டைப்" போலத் தோற்றமளிக்கும் தளவளைவரையாக அமையும்; இதன் ஒவ்வொரு புள்ளிக்கு அருகிலும் இவ்வளைவரையை, ஒரு சீரான சார்புகொண்டு ஒரு கோட்டுடன் இணைக்க இயலும்.
சீரான தளவளைவரையைக் குறிக்கும் சமன்பாடு:
- f(x, y) = 0, f : R2 → R ஒரு சீரான சார்பு. மேலும் இவ்வளைவரையின் மீதமையும் எந்தவொரு புள்ளியிலும் பகுதிவகைக்கெழுக்கள் ∂f/∂x, ∂f/∂y ஆகிய இரண்டும் ஒருபோதும் பூச்சியமாக இருக்காது.
இயற்கணித தளவளைவரை
தொகுஇயற்கணித தளவளைவரை என்பது கேண்முறை அல்லது வீழ்வழித் தளங்களிலமைந்த வளைவரைகளாகும். 18 ஆம் நூற்றாண்டுமுதலே இவ்வளைவரைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வளைவரையின் பல்லுறுப்புச் சமன்பாடு:
- f(x, y) = 0
- வீழ்வழித்தளங்களில்:
- F(x, y, z) = 0, F ஒரு சமபடித்தான பல்லுறுப்புக்கோவை
ஒரு இயற்கணித தளவளைவரையின் சமன்பாட்டை வரையறுக்கும் பல்லுறுப்புக்கோவையின் படியே, அந்த இயற்கணித தளவளைவரையின் படியாக அமையும்.
எடுத்துக்காட்டு:
- x2 + y2 = 1 என்ற சமன்பாட்டால் வரையறுக்கப்படும் வட்டத்தின் படி = 2.
மூன்று படியுள்ளவை முப்படித் தளவளைவரைகள் எனவும், நான்கு படியுள்ளவை நாற்படித் தளவளைவரைகள் எனவும் அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டுகள்
தொகுபெயர் | உட்படு சமன்பாடு | துணையலகுச் சமன்பாடு | ஒரு சார்பாக | வரைபடம் |
---|---|---|---|---|
நேர் கோடு | ||||
வட்டம் | ||||
பரவளைவு | ||||
நீள்வட்டம் | ||||
அதிபரவளைவு |
மேற்கோள்கள்
தொகு- Coolidge, J. L. (April 28, 2004), A Treatise on Algebraic Plane Curves, Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-49576-0.
- Yates, R. C. (1952), A handbook on curves and their properties, J.W. Edwards, அமேசான் தர அடையாள எண் B0007EKXV0.
- Lawrence, J. Dennis (1972), A catalog of special plane curves, Dover, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-60288-5.
வெளியிணைப்புகள்
தொகு- Weisstein, Eric W., "Plane Curve", MathWorld.