தவசிமடை பாளையம்

தவசிமடை பாளையம் திண்டுக்கல் பகுதியில் சிறுமலைக்கு மேற்கில் உள்ள பகுதி. தவசி மேடு, தவசிமடு என்றும் அழைக்கப்படுகிறது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இது இருந்துவந்துள்ளது .

பெயர்க்காரணம் தொகு

துவக்கத்தில் இசுலாமிய மன்னன் ஒருவனுக்கு பெண் கொடுக்க மறுத்து அதனால் மதுரைக்கு வடமேற்கில் உள்ள சிறுமலைக்கு தங்கள் இனத்தாரோடு கம்பளத்து நாயக்கர்கள் வந்து தங்கள் தெய்வங்களை வணங்கி மகாதவசு செய்தனர் என்பதால் இப்பகுதி தவசிகள் மடு என்பது தவசிமடை என்று ஆனது.

வரலாறு தொகு

நாகம்ம நாயக்கர் தமிழகthதிற்கு படைகொண்டு வருகையில் உடல் நலம் சரியில்லாத நிலையில் இப்பகுதியில் இருந்த கொத்தாள நாயக்கர் தனது மந்திரத்தில் குணப்படுத்தினார். இதனால் மனம் மகிழ்ந்த நாகம்ம நாயக்கர் அவரும் அவர் சமுதாயமும் தவசு செய்து கொண்டிருந்த இடத்தில் காடுகளை அழித்து கிராமங்களை உருவாக்கி தவசிமடு என்ற பாளையத்தை உருவாக்கி அதனை இவர்களை ஆளச் செய்துள்ளார். இவர்கள் நாகம்ம நாயக்கருக்கு நெருக்கம் ஆனவர்கள் மேலும் இவர்களுக்கு பல வெகுமதிகளையும் அவர் தந்துள்ளார் . விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்களைக் கொண்டு அமைத்த படையில் தவசுமடையும் பங்குகொண்டு பெரும் வீரர்களை இழந்தது. மூக்கறுப்பு போரிலும் இவர்கள் பங்கு கொண்டு இருந்தனர் .

மேற்கோள்கள் தொகு

<references>

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவசிமடை_பாளையம்&oldid=2767857" இலிருந்து மீள்விக்கப்பட்டது