தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி

தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டத்தில் பொறையார் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியாகும். 1882 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாட்டின் பழமையான பள்ளிகளில் ஒன்றாகும்.

1862 ஆம் ஆண்டில், எஸ்.பி.ஜி. மிஷன் என்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனம், பொறையாரில் ஒரு பள்ளியைத் திறந்தது. ஆனால் அவர்களால் பள்ளியை சரியாக நிர்வகிக்க முடியவில்லையாதலால் 1882ஆம் ஆண்டில், அப்பள்ளியை மூட முடிவுசெய்தது. பொறையர் நாடார் எஸ்டேட் தவசுமுத்து நாடார் அவர்கள் தனது மாவட்டத்தில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு பள்ளி அவசியம் என அறிந்து இருந்தார். எனவே எஸ்.பி.ஜி. மிஷனுடமிருந்து பள்ளியை வாங்கினார்.[1]

1882 ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று “தவசுமுத்து நாடார் பள்ளி” என்று புது பெயருடன் பள்ளி திறக்கப்பட்டது. திரு. நெய்லர் எனும் ஒரு ஆங்கிலேயரை தலைமை ஆசிரியராக நியமித்தார்.[2]

நாடார் பள்ளி என்று அழைக்கப்படும் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி, 125 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் (ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்) ஒரு அடையாளமாக இருந்து வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ayyar, KN Krishnaswami (1933). Statistical Appendix And Supplement To The Revised District Manual (1906) For Tanjore District. p. 201.
  2. "தவசுமுத்து நாடார் உயர்நிலைப்பள்ளி". Nadars.in.