தவளாம்பரி
தவளாம்பரி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 49வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 49வது இராகத்திற்கு தவளாங்கம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம2 க3 ரி1 ஸ |
- இது பிரம்ம என்றழைக்கப்படும் 9வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் காயகப்பிரியா (13) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
தொகுவகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | ஸ்ரீ வாணி புச்தகபானி | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | ஆதி |
கிருதி | சிருங்காராதி | முத்துசாமி தீட்சிதர் | கண்ட ஏக |