தாசோஸ்

கிரேக்கத் தீவு

தாசோஸ் (Thasos அல்லது Thassos கிரேக்கம்: Θάσος‎ ) என்பது ஒரு கிரேக்க தீவு ஆகும். புவியியல் ரீதியாக இது வடக்கு ஏஜியன் கடலின் ஒரு பகுதியாகும். ஆனால் நிர்வாக ரீதியாக கவாலா பிராந்திய அலகு, மாசிடோனியாவின் ஒரு பகுதியாகும். இது வடக்கே உள்ள பெரிய கிரேக்க தீவாகும். மேலும் கிரேக்கத் தீவுகளில் பரப்பளவில் 12 வது பெரிய தீவாகும். தீவில் உள்ள மிகப்பெரிய நகரத்தின் பெயர் தாசோஸ் (அதிகாரப்பூர்வமாக லிமெனாஸ் தாசோ, "போர்ட் ஆஃப் தாசோஸ்" என அழைக்கப்படுகிறது) ஆகும். இந்த நகரம் தீவின் வடக்குப் பகுதியில், கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கு எதிரே அமைந்துள்ளது. மேலும் இது கெரமோட்டியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் (6 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. தசேஸ் தீவு பழங்காலத்திலிருந்தே அதன் மிதவெப்ப நீர் ஊற்று குளியல் வளாகங்களுக்காக அறியப்படுகிறது.

தாசோஸ்
Περιφερειακή Ενότητα / Δήμος
Θάσου
பிராந்திய அலகு
தீவின் தலைநகரான தாசோசின் துறைமுகமான லிமினாஸ்.
தீவின் தலைநகரான தாசோசின் துறைமுகமான லிமினாஸ்.
கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேசிற்குள் தாசோஸ்
கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேசிற்குள் தாசோஸ்
ஆள்கூறுகள்: 40°41′N 24°39′E / 40.683°N 24.650°E / 40.683; 24.650
நாடுகிரேக்கம்
பிராந்தியம்கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேஸ்
தலைநகரம்தாசோஸ்
பரப்பளவு
 • மொத்தம்380.097 km2 (146.756 sq mi)
ஏற்றம்
1,205 m (3,953 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,770
 • அடர்த்தி36/km2 (94/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
640 04
தொலைபேசி குறியீட்டு எண்25930
வாகன பதிவு எண்ΚΒ
இணையதளம்www.thassos.gr
தாசோஸ் (மேற்கிலிருந்து)

தாசோசின் பொருளாதாரமானது மரம் (காடுகள் நிறைந்தது), பளிங்கு சுரங்கங்கள், ஆலிவ் எண்ணெய், தேன் ஆகியவற்றை நம்பியுள்ளது. மற்ற கிரேக்க தீவுகளின் அளவிற்கு இல்லாவிட்டாலும், 1960களில் இருந்து சுற்றுலாவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசோஸ்&oldid=3400148" இலிருந்து மீள்விக்கப்பட்டது