தாதுக்கள் (ஆயுர்வேதம்)

தாதுக்கள் (Dhātus) என்பது நாம் உண்ணும் உணவானது செரித்து இரசமாகி , இரத்தமாகி, தசையாகி, கொழுப்பாகி, எழும்பாகி கடைசியில் சுக்கில சுரோணிதமாகும் வரை உடலில் தொடர்ந்து நடைபெறும் பல இரசாயன மாற்றங்களை குறிக்கிறது.[1][2][3][4]

தாதுக்களின் தன்மாற்றம்

தொகு
  • ரச தாது (இரசம்) நாம் உண்ணும் உணவு இரசமாக மாறுவது .இந்த தாதுவின் முக்கிய செயல்பாடு ஊட்டச்சத்து ஆகும்.[5]
  • இரத்த தாது (இரத்தம் ) இது உணவு செரிமானத்திற்குப் பிறகு உருவாகும் இரண்டாவது தாது ஆகும்.இரசம் இரத்தமாக மாறுகிறது.[5]
  • மாம்ச தாது (சதை ) இது மூன்றாவது தாது ஆகும்.இது இரத்தத்திலிருந்து பிரிக்கிறது . எலும்புகளை மூடும் முக்கிய செயல்பாடு.[5]
  • மேதுஸ் தாது (கொழுப்பு ) [5]
  • அஸ்தி தாது (எழும்பு ) [5]
  • மஜ்ஜா தாது (மஜ்ஜை அல்லது மூளை ) [5]
  • சுக்கிர தாது (சுக்கிலம் அல்லது சுரோணிதம்) [5]

பாரம்பரிய நூல்கள் இவற்றை ஏழு தாதுக்கள் (சப்ததாதுஸ்) என்று குறிப்பிடுகின்றன. ஓஜஸ், வீரியம் அல்லது உயிர்ச்சக்தி என்பது எட்டாவது தாது ஆகும். இது மகா தாது என்றும் குறிப்பிடுகின்றன .[6][7]

தாதுக்கள் பற்றி திருமந்திரம்

தொகு

திருமந்திரப்பாடல் : 2125
இரத முதிர மிறைச்சிதோன் மேதை
மருவிய வத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழா முபாதி
உருவ மலாலுட லொன்றென லாமே.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. வேதாத்திரி, மகரிஷி (2013). மனவளக்கலை தொகுப்பு இரண்டு (27 ed.). ஈரோடு: உலக சமுதாய சேவா சங்கம், வேதாத்திரி பதிப்பகம். p. 4-5,.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  2. Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899
  3. Jonas: Mosby's Dictionary of Complementary and Alternative Medicine. (c) 2005, Elsevier.
  4. "எழுவகைத் தாது". ta. wiktionary.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Seven Dhatus of Ayurveda
  6. Dhātus http://www.ayurveda-recipes.com/dhatus.html பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்
  7. Tathagatananda, Swami. "Value of Brahmacharya". Vedantany.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.
  8. "திருமந்திரம்-எட்டாம் தந்திரம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதுக்கள்_(ஆயுர்வேதம்)&oldid=4124260" இலிருந்து மீள்விக்கப்பட்டது