தாது மாவட்டம்

தாது மாவட்டம் (Dadu District) (சிந்தி மொழி: دادو‎), (உருது: دادو‎ ) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் கோட்டத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும்.

தாது மாவட்டம்
ضلعو دادو
மாவட்டம்
சிந்து மாகாணத்தில் தாது மாவட்டத்தின் அமைவிடம்
சிந்து மாகாணத்தில் தாது மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
தலைமையிடம்தாது
 • District Nazim(ISF)
பரப்பளவு
 • மொத்தம்19,070 km2 (7,360 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்20,74,433[1]
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இடக் குறியீடு025
வருவாய் வட்டங்கள்6

மாவட்ட நிர்வாகம்

தொகு

19070 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாது மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக தாது வட்டம், ஜோகி வட்டம், காய்ர்பூர் நாதன் ஷா வட்டம், மெகர் வட்டம் மற்றும் தாது கிராமப்புற வட்டம் ஆறு வருவாய் வட்டங்களாகவும், எழுபத்தி எட்டு கிராம ஒன்றியக் குழுக்களாகவும், 523 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் நான்கு நகராட்சி மன்றங்களையும், ஒன்பது நகரப் பஞ்சாயத்துக் குழுக்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையில்

தொகு

1998ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி, 19070 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாது மாவட்டத்தின் மக்கள் தொகை 16,88,811 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கல் 8,87,061 (52.53 %) ஆகவும்; பெண்கள் 801750 (47.47 %) ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (1981 - 98) 2.65% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 110.6 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 88.6 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 35.6% ஆகவுள்ளது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
  2. "District at a glance Dadu". Archived from the original on 2017-02-06. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.

ஆதார நூற்பட்டியல்

தொகு
  • 1998 District census report of Dadu. Census publication. Vol. 82. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாது_மாவட்டம்&oldid=3585186" இலிருந்து மீள்விக்கப்பட்டது