தானி அருவி

பாக்கித்தானி ஆசாத் காசுமீரில் உள்ள அருவி

தானி அருவி (Dhani Waterfall) என்பது பாக்கித்தான் நாட்டில் உள்ள ஆசாத் காசுமீரின் முசாபராபாத்து மாவட்டத்தில் இருக்கும் நீலம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அருவியாகும். முசாபராபாத்து மாவட்டத்தில் இருந்து 38 கிலோமீட்டர் (24 மைல்) தொலைவில் இந்த அருவி உள்ளது. நீலம் பள்ளத்தாக்கில் காணப்படும் மிக உயரமான அருவியும் இதுவேயாகும். கடல் மட்டத்திலிருந்து 1092 மீட்டர் உயரத்தில் (3583 அடிகள்) தானி அருவி உள்ளது. 15 மீட்டர் உயரத்திலிருந்து இங்கு நீர் விழுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் மார்ச்சு மாதம் முதல் சூன் மாதம் வரை இங்கு நீரோட்டம் நன்றாக இருக்கும். சூலை மாதம் முதல் நீர் மட்டம் குறைவாக இருக்கும். தானி நோசெரி அருவி என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.

தானி அருவி
Dhani Waterfall
நீலம் பள்ளத்தாக்கில் தானி அருவி8
தானி அருவி is located in பாக்கித்தான்
தானி அருவி
Map
அமைவிடம்முசாஃபராபாத் மாவட்டம், நீலம் பள்ளத்தாக்கு, ஆசாத் காசுமீர் பாக்கித்தான்
ஆள்கூறு34°25′27″N 73°41′29″E / 34.424293°N 73.691351°E / 34.424293; 73.691351[1]
ஏற்றம்1,092 மீட்டர்கள் (3,583 அடி)[2]
மொத்த உயரம்15 மீட்டர்கள் (49 அடி)[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Dhani Waterfall on Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
  2. "Elevation of Waterfall". Elevation.maplogs.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2018.
  3. "Height of Dhani Waterfall". www.pakistantravelguide.pk. பார்க்கப்பட்ட நாள் 11 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானி_அருவி&oldid=3607794" இலிருந்து மீள்விக்கப்பட்டது