தாமசு உலோகி மெக்டொனால்டு
தாமசு உலோகி மெக்டொனால்டு (Thomas Logie MacDonald) ஓர் இசுகாட்லாந்து வானியலாளரும் அரசியலாளரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினரும்(1901–1973) ஆவார் . மெக்டொனால்டு நிலாக் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
இவர் கிளாசுக்கோ பல்கலைக்கழகப் பட்டதாரி. இவர் பிரித்தானிய வானியல் கழகத்தின் இசுகாட்லாந்துக் கிளையின் செயலாளரும் தலைமைப் பொறுப்பாளரும் ஆனார். இவர்1929 இலிருந்து 1931வரை பிரித்தானிய வானியல் கழகத்தின் மேற்கு இசுகாட்லாந்துக் கிளையின் தலைவராக இருந்துள்ளார்.[1]
இவர் 1928 மார்ச்சு 5 இல் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவருக்கு முன்மொழிந்தவர்கள் கெக்ட்டர் கோப்லாந்து மாக்பெர்சன், இரால்ப் ஆல்லன் சாம்ப்சன், உலூத்விக் பெக்கர், எடுவார்டு டெய்லர் ஜோன்சு ஆகியோர் ஆவர். இவர் 1961 இல் இக்கழகத்தில் இருந்து விலகினார்.
இவர் 1938 இலிருந்து 1946 வரை இரண்டால் உலகப் போரின்போது பிரித்தானிய வானியல் கழக நிலாப் பிரிவின் இயக்குநராக இயக்குநராக இருந்தார்.[3] அப்பொது இவர் கிளாசுக்கோ நகரத்தில் 9, கோல்புரூக் மாடிவீட்டில் வாழ்ந்துவந்தார்.[4]
இவர் 1961 மே மாத்த்தில் இருந்து 1962 வரை பரோ கவுண்டியின் கார்லிசுலே நகரத்துக்கான தொழிலாளர் கட்சி நகரமன்ற உறுப்பினராகவும் மேயராகவும் இருந்தார். இவர் மேயராக விளங்கியபோது செருமானிய கார்லிசுலே/பிளென்சுபர்கு இரட்டை நகரம் உருவானது.[5]
வெளியீடுகள்
தொகு- முதியோர் வானியல் (1932)
- நிலாப் புள்ளியியல் ஆய்வுகள்[6]
- நிலாக் குழிப்பள்ள இறக்கம் (1942)
- வரலாற்று ஒற்றனாக வானியலாளர் (விரிவுரை)
மேற்கோள்கள்
தொகு- "Clan Donald Magazine No 2 (1962)". Archived from the original on 27 செப்டெம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2006..
- ↑ Kelly, Howard L.; Gale, W. F.; Evershed, M. A.; Porthouse, William; Ryves, P. M.; Peek, B. M.; Davidson, M.; Prentice, J. P. M.; Kellaway, G. F.; Housman, W. B.; Porter, J. G.; Reade, Vera (1947). "The History of the British Astronomical Association. Part 2. The Branches and Sections.". Memoirs of the British Astronomical Association 36: 55. Bibcode: 1947MmBAA..36C..55K.
- ↑ C D Waterston; A Macmillan Shearer (July 2006). "Former Fellows of The Royal Society of Edinburgh, 1783–2002: Part 2 (K–Z)" (PDF). Royal Society of Edinburgh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 090219884X. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
- ↑ Return to the Far Side of Planet Moore: Martin Mobberley
- ↑ Minutes of the Meetings of the BAA 1938
- ↑ "Archived copy". Archived from the original on 10 ஏப்பிரல் 2005. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2006.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Thomas Logie MacDonald, Director: 1938-1946". British Astronomical Association. 16 April 2017. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.