தாமரை (விருது)

இக்காலத்தில் இந்திய அரசு பத்மஸ்ரீ என்னும் விருது வழங்கிக் கலைஞர் முதலான பெருமக்களைச் சிறப்பிப்பது போல சங்ககால மன்னர்கள் கூத்தாடும் விறலியர்க்கும், பாடிக்கொண்டே ஆடும் பாடினியர்க்கும் பொன்னால் செய்த தாமரைப் பூவை விருதாக அவர்களின் கூந்தலில் சூட்டிவிட்டு பாராட்டினர்.

கரிகாலன் முத்து வைத்த தாமரைப் பூவைப் பாடினிக்கு விருதாகச் சூட்டிப் பாராட்டினான். [1]

தீயில் புடம் போட்ட பொன்னால் செய்த தாமரையை தொண்டைமான் இளந்திரையன் பாடினிக்கு விருதாகச் சூட்டிவிட்டான். [2]

அடிக்குறிப்புதொகு

 1. எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை
  சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி, 160
  நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
  வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய, (பொருநராற்றுப்படை 151 முதல்)

 2. ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
  நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி;
  உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
  பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு,
  புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின் 485
  தொடை அமை மாலை விறலியர் மலைய; (பெரும்பாணாற்றுப்படை 431-436)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_(விருது)&oldid=2764947" இருந்து மீள்விக்கப்பட்டது