தாமஸ் எடிசனின் இல்லம்
தாமஸ் எடிசனின் இல்லம் என்பது அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில் நகரம், புட்சர்டவுன் (Butchertown) பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க வீடு ஆகும். ஒவ்வொரு தளத்திலும் ஒரு முழுமையான அடுக்குவீடு கொண்ட இந்த இரட்டை மாடி வீடு (Duplex House) 1850 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தாமஸ் எடிசன் 1866 ஆம் ஆண்டு முதல் 1867 ஆம் ஆண்டு வரை லூயிஸ்வில்லில் வாழ்ந்த காலத்தில் இங்கு வசித்திருக்கலாம். இந்த வீட்டில் எடிசனின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் உள்ளது. [1]
தாமஸ் எடிசன் இல்லம் | |
Interactive map showing the Thomas Edison House’s location | |
அமைவிடம் | 729 கிழக்கு வாஷிங்டன் தெரு, லூயிஸ்வில், கென்டக்கி |
---|---|
ஆள்கூற்று | 38°15′20″N 85°44′18″W / 38.2555°N 85.7383°W |
வகை | வரலாற்று அருங்காட்சியகம் |
வலைத்தளம் | www |
எடிசன் காலத்தில் லூயிஸ்வில்
தொகு1866 ஆம் ஆண்டில், அதாவது 19 வயதில், தாமஸ் எடிசன், ஒரு திறமையான தந்திபொறி பணியாளர் ஆவார். வெஸ்டர்ன் யூனியன் (Western Union) என்ற அமெரிக்க பன்னாட்டு நிதி சேவை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக லூயிஸ்வில்லுக்கு வந்தார். அப்போது இவருடைய அலுவலகம், முதன்மை மற்றும் இரண்டாவது தெருக்களுக்கிடையே, ஒரு மூலையில் இருந்தது. ஆகஸ்ட் 1866 ஆம் தேதி, பிரேசிலுக்கு ஒரு பயணம் மேற்கொள்ள எண்ணிய எடிசன் இங்கிருந்து புறப்பட்டார். ஆனால் நீர்வழி மூடப்பட்டதால் நியூ ஆர்லியன்ஸில் திரும்பினார். எனவே, அவர் மீண்டும் லூயிஸ்வில்லில் வேலைக்குத் திரும்பினார். புட்ச்சர்டவுன், கிழக்கு வாஷிங்டன் தெருவில் உள்ள இந்த இரட்டை மாடி வீட்டில் தங்கினார்.
1867 ஆம் ஆண்டில், ஒரு நாள் இரவு நேர வேலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆர்வம் காரணமாக வேதியல் பரிசோதனைகளில் ஈடுபட்டுவந்த எடிசன், அன்று ஒரு மின்கலத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தக அமிலம் தவறுதலாக அவரது முதலாளியின் மேசை கீழே தரையில் கொட்டியது. அடுத்த நாளே, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த நகரத்தை விட்டும் வெளியேறினார். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1883 ஆம் ஆண்டில், எடிசனின் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான ஒளிரும் ஒளி விளக்கு, இதே லூயிஸ்வில்லில் நிரூபித்துக் காட்டப்பட்டது.
மேலும் பார்க்கவும்
தொகு- Louisville பெருநகரப் பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ Jeff Campbell; Loretta Chilcoat; Susan Derby; Andrew Dean Nystrom (2004). Lonely Planet USA. Lonely PlanetTravel. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74104-192-9.