தாமிரபரணி நம்பியாறு இணைப்புக் கால்வாய்
தாமிரபரணி நம்பியாறு இணைப்புக் கால்வாய் (Tamirabarani–Nambiar Link Canal) என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்ட கால்வாய் ஆகும். இது தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு அணைகளை இணைக்கும் திட்டமாகும். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் ஆறுகளின் நீரைத்தான் தமிழ்நாடு பெரிதும் நம்பியுள்ளது. மாநிலத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு திட்டத்தை மாநில அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டம் தாமிரபரணி ஆற்றில் உள்ள 13,000 எம். சி. எப் உபரி நீரைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1][2]
திட்டம்
தொகுஇத்திட்டத்தின் மூலம் 6, 038 எக்டேர் நிலம் பாசனத்தாகும் 17,002 எக்டேர் நிலம் நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் பயனடையும். இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 694 எக்டேர் நிலமும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 106 எக்டேர் நிலமும் கையகப்படுத்தப்படும்.[3]
வழி
தொகுமணிமுத்தாறு மற்றும் பாபநாசம் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் மூன்றாவது அணைக்கட்டில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தற்போதுள்ள கன்னடியன் கால்வாய் வழியாக நீர் சுமார் 37 கி. மீ. நீளத்திற்குச் செல்லும். மேலும், கன்னடியன் கால்வாயுடன் இணைக்கப்படும் நீரைத் திசை திருப்புவதற்காக 6.40 கி. மீ. கீழ்நிலையில் 73 கி.மீ. நீளத்திற்கு ஒரு புதிய கால்வாய் வெட்டப்படும். இது மன்னார் வளைகுடா அருகில் உள்ள திசையன்விளையினை அடையும். ஒரு புதிய தடுப்பணை கட்டப்படும். இந்தக் கால்வாயின் குறுக்கே பல சிறிய இணைக்கும் கால்வாய்கள் கூடுதலாக அதிக நிலத்திற்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tamil Nadu to take up river linking projects
- ↑ "River interlinking must be a national priority". businessstandard.com. Business Standard. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ தினத்தந்தி (2024-08-11). "தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம்:1.3 கி.மீ. கால்வாய் அமைக்க நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-08-11.