தாய் குழு
தாய் குழு (Aama Samuha) என்பது பாலின சமத்துவம், பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாள நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வக் குழுவாகும்.[1][2] இக்குழு கூட்டங்கள், கல்வி போன்ற பிரச்சனைகளை பெண்கள் பேசுவதற்கான ஒரு அரங்கமாகவும் செயல்படுகின்றன; சுகாதாரம் மற்றும் உடல்நலம்; பெண் அதிகாரம்; மற்றும் இனப்பெருக்க உரிமைகள் போன்றவற்றையும் குழுவினர் விவாதிக்கின்றனர். மேற்கு நேபாளத்தில் குருங் மக்களால் இக்குழு தொடங்கப்பட்டது. ஏனெனில் குருங் ஆண்கள் நேபாளத்தை விட்டு பிரித்தானிய இராணுவத்திலும் (கூர்காக்களின் படை) மற்றும் இந்திய இராணுவத்திலும் (கூர்கா படைப்பிரிவுகள்) சேருவதற்காக செல்வார்கள்.[3] பாட்டு, நடனம் மற்றும் மாலை நேரத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகவே முதலில் தாய் குழு தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mothers' groups uplift women and create social awareness in rural parts of Baitadi", kathmandupost.com (in English), பார்க்கப்பட்ட நாள் 2024-02-24
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Asian Women (in ஆங்கிலம்). Research Center for Asian Women, Sookmyung Women's University. 1997. p. 128.
- ↑ Volunteerism in Nepal (in ஆங்கிலம்). National Planning Commission, National Development Volunteers Service. 2002. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99933-701-3-0.