தாரமோன் பீபி
தாரமோன் பீபி (Taramon Bibi) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீராங்கனையாவார். 1956 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.[1] வங்கதேசத்தில் பிர் புரோதிக் விருதைப் பெற்ற இரண்டு பெண் சுதந்திரப் போராளிகளில் இவரும் ஒருவராவார். [2] [3] பிர் புரோட்டிக்கு என்பது வீரதீரச் செயலுக்காக வங்கதேச நாட்டில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதாகும். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளதேசத்தின் விடுதலைப் போரின்போது இவர் முக்தி பாகினி எனப்படும் விடுதலை இராணுவத்தின் உறுப்பினராக நேரடிப் போரில் ஈடுபட்டார். முக்தி பாகினி என்பது பாக்கித்தான் இராணுவத்திற்கு எதிராக போராடிய கொரில்லாப் படையாகும். [4]
தாரமோன் பேபி Taramon Bibi | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாய்மொழியில் பெயர் | তারামন বিবি | ||||||||||||||
பிறப்பு | அண். 1956 சங்கர் மதாப்பூர், குரிகிராம் மாவட்டம், கிழக்கு பாகிஸ்தான், பாக்கித்தான் | ||||||||||||||
இறப்பு | (அகவை 62) சார் ராயிப்புர் உபசிலா , குரிகிராம்,வங்காளதேசம் | ||||||||||||||
தேசியம் | பங்களாதேசி | ||||||||||||||
|
சுயசரிதை
தொகுவடக்கு வங்காள தேசத்தின் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ள குரிகிராம் மாவட்டம் சங்கர் மதாப்பூர் கிராமத்தில் அப்துசு சோபன் மற்றும் குல்சூம் பேவா ஆகியோருக்கு மகளாக தாராமோன் பீபி பிறந்தார். முக்தி பாகினி வீரர்களுக்கு உதவி சமையல்காரராகவும் முகாமை சுத்தம் செய்யவும் பதினாறு வயதில் இவர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டார். போரில் ஈடுபடும் முயற்சியில் இவர் ஆர்வம் காட்டினார் இராணுவப் பயிற்சியின் காலாட் படைப்பிரிவில் 11 ஆவது பிரிவுக்கு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளும்படி காலாட்படை படைப்பிரிவின் படைத்துறை மேலாளர் முகித்தை கேட்டார். அவர் 303 பிரிட்டிசு துப்பாக்கி மற்றும் துணை இயந்திர துப்பாக்கிகளின் பயன்பாடு குறித்து இவருக்குப் பயிற்சி அளித்தார். [5] படைத்துறை தளபதி அபு தாகரின் தலைமையில் இவர் பிரிவு 11 படைத் துறையில் இருந்தார்.
தாமோன் பீபி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று அதிகாலை 1:30 மணிக்கு கூரிகிராமில் உள்ள சார் ராயிப்பூர் உபாசிலாவில் உள்ள இவரது இல்லத்தில் இறந்தார். [6]
விருது
தொகுபோருக்குப் பிறகு, 1973 ஆம் ஆண்டில் வங்காளதேச அரசாங்கம் இவருக்கு பிர் புரோதிக் எனப்படும் நானாகாவது உயர்ந்த குடிமை விருதான வீரச் சின்னத்தை வழங்கி தாரமோன் பீபியைச் சிறப்பித்தது. [4] ஆனால் இவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதால் விருது தாரமோனிடம் ஒப்படைக்கப்படவில்லை. 1995 ஆம் ஆண்டு வரை மைமென்சிங் நகரத்தைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் இவரைக் கண்டுபிடிக்கும் வரை தாரமோன் பீபிக்கு இவ்விருது செய்தி தெரியாமல் இருந்தது. [7]
அப்துல் மசீத்து என்ற ஒரு விவசாயியின் மனைவியாக தாரமோன் பீபி வறுமையின் பிடியில் சிக்கி கடினமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். மைமன்சிங்கு நகரத்தைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் இவரைச் சந்தித்த கேள்விகள் கேட்டபோதுதான் இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு போரெர் காகோச்சு என்ற வங்க மொழி தினசரியில் இவர் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியிடப்பட்டது. பின்னர் தாரமோன் பீபியை டாக்காவுக்கு அழைத்துச் சென்று இறுதியாக இவருக்கு 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் அன்று அப்போது வங்காள தேச பிரதமரான கலீதா சியா இவ்விருதை தாரமோனுக்கு வழங்கினார் [8]. தாரமோன் பீபி வீடு கட்டிக் கொள்ள வீட்டு மனையும் விவசாயம் செய்வதற்காக நிலமும் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் இவரைப் பாராட்டி கவுரவித்தன.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபீபி அப்துல் மசீத்தை மணந்தார். [9] அவர்களுக்கு அபுதாகர் என்ற ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். [9] [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Taramon Bibi is no more". Banglanews24.com இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181201093230/https://m.banglanews24.com/national/news/bd/688358.details.
- ↑ "The girl who became a soldier". The Daily Star. http://www.thedailystar.net/op-ed/the-girl-who-became-soldier-8071.
- ↑ "Bir Protik Taramon Bibi transferred to Dhaka CMH". The Daily Star. http://www.thedailystar.net/city/bir-protik-taramon-bibi-dhaka-cmh-now-1444327.
- ↑ 4.0 4.1 "Bir Pratik Taramon Bibi dies at 62". https://bdnews24.com/bangladesh/2018/12/01/bir-pratik-taramon-bibi-dies-at-62."Bir Pratik Taramon Bibi dies at 62". Retrieved 2018-12-01.
- ↑ "Taramon Bibi: A folktale of a country". Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 2018-01-08.
- ↑ "Bir Protik Taramon Bibi dies". The Daily Star. https://www.thedailystar.net/country/news/bir-protik-taramon-bibi-dies-1667713.
- ↑ "The women in our Liberation War". http://www.thedailystar.net/supplements/victory-day-2016-special/the-women-our-liberation-war-1330396.
- ↑ "Tales of Endurance and Courage" இம் மூலத்தில் இருந்து 2005-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050311091725/http://humanists.net/avijit/26th_march/tales_of_endurance.htm.
- ↑ 9.0 9.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Bhorer Kagoj இம் மூலத்தில் இருந்து 2018-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181201093445/http://www.bhorerkagoj.net/online/2016/02/16/181417.php.
- ↑ The Daily Star. https://www.thedailystar.net/city/bir-protik-taramon-bibi-dhaka-cmh-now-1444327.