தாரா செரியன்

தாரா செரியான் (Tara Cherian) ( 1913 மே - 2000 நவம்பர் 7) என்பவர் இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் நாட்டிலேயே முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர்.   1967 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கியது.[2]

ஆரம்பகால வாழ்கை தொகு

இவர் 1913 இல் பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த அவர், ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

மேயராக தொகு

இவரது கணவர் செரியனைப் போன்று 1957 இல் இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக் காலத்தில்தான் சென்னையில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 "Former Mayor of Chennai dead". The Hindu. 8 November 2000. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
முன்னர்
கே. என். சீனிவாசன்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1957-1958
பின்னர்
கே. கமலக்கண்ணன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_செரியன்&oldid=3916469" இலிருந்து மீள்விக்கப்பட்டது