தாரா மோகனன்

தாரா மோகனன் (Tara Mohanan) ஒரு மொழியியலாளர் மற்றும் தின்கியூ என்ற கல்வி அமைப்பின் இணை நிறுவனர் ஆவார். [1] இவர் இந்தி, மலையாளம் மற்றும் பிற தெற்காசிய மொழிகளில் சொற்பொருள், சொற்றொடரியல், உருபனியல் மற்றும் ஒலியனியல் துறைகளில் பணியாற்றுவதற்காக அறியப்படுகிறார் . இவரது கணவர் மொழியியல் அறிஞர் கே.பி.மோகனன் ஆவார் .

தாரா மோகனன்
தேசியம் இந்தியன்
தொழில்(கள்) மொழியியலாளர், தொழிலதிபர்

கல்வி வாழ்க்கை தொகு

மோகனன் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளின் மத்திய நிறுவனத்தில் மொழியியலில் எம்.லிட் பட்டம் பெற்றார். மோகனன் 1990 இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆர்கியூமெண்ட்சு இன் இந்தி என்ற தலைப்பில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.அதில், அனுபவ தரவுகளின் அடிப்படையில் இந்தித் தொடரியல் முறையினை விவரிக்க ஒரு தனித்துவமான இலக்கண முறைமையை அறிமுகப்படுத்தினார். [2] 2006 வரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மொழியியலைக் கற்பித்தார், அங்கு கே.பி. மோகனனுடன் மொழியியலில் இளங்கலை திட்டத்தை வடிவமைத்தார். [3]

இந்தித் தொடரியல் பங்களிப்புகள் தொகு

மோகனனின் ஆய்வுக் கட்டுரை, ஆர்கியூமெண்ட்சு இன் இந்தி (1994 இல் இந்தியில் வாத அமைப்பு) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது), இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளின் தொடரியல் ஆய்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியில் பொருள் ஒருங்கிணைப்புப் பற்றிய இவரது கட்டுரை, இலக்கண வகைகள் மற்றும் இலக்கண செயல்பாடுகளின் கோட்பாட்டுப் பிரிவை மேலும் விரிவுபடுத்த உதவியது.

படைப்புகள் தொகு

  • சிலபிள் இசுரக்சர் இன் மலையாளம் -1989
  • ஆர்கியூமெண்ட்சு இன் இந்தி -1990
  •  ஆர்க்கியுமெண்ட் இசுர்க்சர் இன் இந்தி - 1994

சான்றுகள் தொகு

  1. "People". ThinQ. 2020. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  2. Ramchand, Gillian (1996). "Tara Mohanan, Argument structure in Hindi. (Dissertations in Linguistics.) Stanford, CA: CSLI Publications, 1994. Pp. 269.". Journal of Linguistics (Cambridge University Press) 32 (2): 530–532. doi:10.1017/S0022226700016066. https://archive.org/details/sim_journal-of-linguistics_1996-09_32_2/page/530. 
  3. Singh, Praveen (2020). "Praveen Singh (PS) Talks to Dr. Tara Mohanan (TM)". Language and Language Teaching 9 (2): 59. http://llt.org.in/wp-content/uploads/2021/01/LLT18.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_மோகனன்&oldid=3852496" இலிருந்து மீள்விக்கப்பட்டது