தாரியா தௌலத் பாக்
தாரியா தௌலத் பாக் [1] என்பது திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை ஆகும். இது மைசூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2] 1784 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இதனைத் திப்பு சுல்தானின் தந்தையான ஐதர் அலி கட்டுவிக்கத் தொடங்கினார் எனினும் திப்பு சுல்தானே அதனைக் கட்டி முடித்தார். காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் இந்திய-சரசனியக் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை அழகிய பூங்கா ஒன்றின் மத்தியில் அமைந்துள்ளது.
1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அரண்மனையைப் பிரித்தானியத் தளபதி கேணல் வெல்லெசுலி தனது இருப்பிடமாகப் பயன்படுத்தினார். 1959 ஆம் ஆண்டில் இது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் ஒரு பகுதியில் திப்பு சுல்தான் அருங்காட்சியகம் இயங்கிவருகிறது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ செல்வப் பூங்கா என்பது பொருளாகும்
- ↑ Raman, A (1994). Bangalore - Mysore. Orient Blackswan. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863114318.