தாரியா வாயிட்டு

உருசிய சதுரங்க வீராங்கனை

தாரியா சிடானிசிலேவோவ்னா வாயிட்டு (Daria Stanislavovna Voit) என்பவர் உருசிய நாட்டின் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். பிடே மாசுட்டர் மற்றும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டங்களுடன் இவர் சதுரங்கம் ஆடி வருகின்றார்.

தாரியா வாயிட்டுDaria Voit
முழுப் பெயர்தாரியா சிடானிசிலேவோவ்னா வாயிட்டு
நாடு உருசியா
பிறப்பு11 சனவரி 1994 (1994-01-11) (அகவை 30)
மாசுக்கோ[1]
பட்டம்பிடே மாசுட்டர் (2010)
பெண்கள் கிராண்டு மாசுட்டர் (2017)

சதுரங்க வாழ்க்கை

தொகு

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உருசிய இளையோர் சதுரங்க சாம்பியன் போட்டியில் தாரியா வாயிட்டு வெற்றி பெற்றார் [2][3]. அடுத்த ஆண்டில் ஏரவான் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியின் பெண்கள் பிரிவில் வாயிட்டு வெற்றி பெற்றார் [4]. இதே போல 2016 இல் மாசுக்கோ பெண்கள் விரைவு [5] சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் பிளிட்சு எனப்படும் நேரக் கட்டுப்பாட்டு சாம்பியன் போட்டியையும் இவர் வென்றார் [6]. 2016 ஆம் ஆண்டு நோவோசிபிர்சுக் நடைபெற்ற பெண்கள் உருசிய சாம்பியன் பட்டப் போட்டி ஒன்றில் 4 முதல் 7 இடங்களுக்கான போட்டியின் இறுதியில் வாயிட்டு சமநிலை பெற்றார் [7].

மேற்கோள்கள்

தொகு
  1. Title Applications - 2nd quarter PB Meeting 2017 by written resolution. FIDE.
  2. Crowther, Mark. "TWIC 1016: ch-RUS Junior 2014". The Week in Chess. பார்க்கப்பட்ட நாள் 2017-08-09.
  3. "В Лоо завершилось детское первенство России" (in ru). Russian Chess Federation. 2014-04-24. http://ruchess.ru/news/all/V_loo_zavershilos_detskoe_pervenstvo_rossii_2014/. 
  4. "Daria Pustovoitova and Sanan Sjugirov win European Universities Chess Championships". Chessdom. 2015-10-12. பார்க்கப்பட்ட நாள் 2017-08-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Boris Grachev Wins Moscow Rapid Championship". Russian Chess Federation. 2016-09-18. http://ruchess.ru/en/news/all/boris_grachev_wins_moscow_rapid_championship/. 
  6. "Boris Grachev Wins Moscow Blitz Championship". Russian Chess Federation. 2016-09-05. http://ruchess.ru/en/news/all/boris_grachev_wins_moscow_blitz_championship/. 
  7. McGourty, Colin (2016-10-28). "Russian Superfinal 11: Riazantsev's shock win". chess24.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-09.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரியா_வாயிட்டு&oldid=2959860" இலிருந்து மீள்விக்கப்பட்டது