தார்சிசியுஸ்
புனித தார்சிசியுஸ் (Saint Tarcisius) 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஆதித் திருச்சபை கிறித்துவ இரத்த சாட்சி ஆவார். திருத்தந்தை முதலாம் தமாசுசின், படைப்புகளிளிருந்தே இவரைப் பற்றி அறிய முடிகிறது.
புனித தார்சிசியுஸ் Saint Tarcisius | |
---|---|
இரத்த சாட்சி | |
பிறப்பு | தகவலில்லை; |
இறப்பு | ~ 3-ஆம் நூற்றாண்டு |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
திருவிழா | 15 ஆகஸ்ட் |
பாதுகாவல் | பீட சிறுவர்கள், புதுநன்னைக்குத் தயாரிப்பவர்கள் |
இவர் எடுத்துச் சென்ற நற்கருணையை கலகக்காரர்களிடம் தருவதை விட சாவதேமேல் என உயித்துறந்தவர் இவர்.
சான் களித்தொவிலுள்ள அடிநிலக் கல்லறைத் தொகுதியில் ( Catacomb ) இவர் முதலில் புதைக்கப் பட்டாலும் இவரது மீ-பொருட்கள் பின்னர் ரோம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவர் 15 ஆகஸ்ட் அன்று புதைக்கப்பட்டதாக குறுவர். ஆனால் அத்தினம் கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாதிருநாள் ஆனதால் இவரது விழா கத்தோலிக்க நாட்காட்டியில் பொதுவாக காட்டப்படுவதில்லை.
இவர் பீட சிறுவர்களுக்கும், புதுநன்னைக்குத் தயாரிப்பவர்களுக்கும் பாதுகாவலர்.
திருத்தந்தை முதலாம் தமாசுசின் தார்சிசியுஸைக் குறிக்கும் பாடல்
தொகுலத்தீன் மொழியில் உள்ள இப்பாடல் ஒன்றே தார்சிசியுஸின் வாழ்க்கைக்கு சான்றாகும்:
Par meritum, quicumque legis, cognosce duorum,
quis Damasus rector titulos post praemia reddit.
Iudaicus populus Stephanum meliora monentem
perculerat saxis, tulerat qui ex hoste tropaeum,
martyrium primus rapuit leuita fidelis.
Tarsicium sanctum Christi sacramenta gerentem
cum male sana manus premeret uulgare profanis,
ipse animam potius uoluit dimittere caesus
'
prodere quam canibus rabidis caelestia membra.
[1]
குறிப்புகள்
தொகு- ↑ :Damasi Epigrammata , Maximilian Ihm, 1895, n. 14