மரியாவின் விண்ணேற்பு
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு என்பது கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை முதலிய பல திருச்சபைகளின் நம்பிக்கையின் படி மரியாள் தனது உலகவாழ்வின் முடிவுக்குப்பின் விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக்குறிக்கும்.
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா | |
---|---|
![]() "De hemelvaart van Maria", ரூபென்ஸ், சுமார் 1626 | |
ஏற்கும் சபை/சமயம் | கத்தோலிக்க திருச்சபை கிழக்கு மரபுவழி திருச்சபை |
திருவிழா | ஆகஸ்ட் 15 |
சித்தரிக்கப்படும் வகை | வானதூதர்கள் புடை சூழ கன்னி மரியா விண்ணேற்பு அடைவது போன்று |
பாதுகாவல் | அசுன்சியோன் மால்ட்டா தாய்லாந்து |
1950இல் பன்னிரண்டாம் பயஸ் மரியா விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[1]
கத்தோலிக்க திருச்சபையில் இது பெருவிழாவும், கடன்திருநாளும் ஆகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்தொகு
- ↑ Encyclopedia of Catholicism by Frank K. Flinn, J. Gordon Melton 207 ISBN 081605455X page 267
மேலும் படிக்கதொகு
- Duggan, Paul E. (1989). The Assumption Dogma: Some Reactions and Ecumenical Implications in the Thought of English-speaking Theologians. Emerson Press, Cleveland, Ohio
- Shoemaker, Stephen J. (2002, 2006). Ancient Traditions of the Virgin Mary's Dormition and Assumption. Oxford University Press, Oxford. ISBN 0-19-925075-8 (Hardcover 2004, Reprint), ISBN 0-19-921074-8 (Paperback 2006)
வெளி இணைப்புகள்தொகு
- "Munificentissimus Deus - Defining the Dogma of the Assumption" Vatican, நவம்பர் 1, 1950
- Early Traditions of the Virgin Mary's Dormition and Assumption a collection of early Dormition and Assumption narratives with introductions