தார்சிசு (/ˈθɑːrsɪs/) என்பது செவ்வாய்க் கோளின் மேற்கு அரைக்கோளத்தில் நிலநடுவரைக்கு அருகில் உள்ள ஒரு பரந்த எரிமலை மேட்டுச் சமவெளி ஆகும்.[note 1] ஒலிம்பசு மோன்சு, கோளின் மிக உயரமான எரிமலை, பெரும்பாலும் தார்சிசு பகுதியுடன் தொடர்புடையது , ஆனால் உண்மையில் சமவெளியின் மேற்கு விளிம்பில் அமைந்துள்ளது. தார்சிசு என்ற பெயர் கிரேக்க - இலத்தீன மொழிபெயர்ப்பாகும் , இது உலகின் மிக மேற்கத்திய முனையில் உள்ள நிலத்தை விவிலிய தார்சிசாவின் கிரேக்க - இலத்தீன ஒலிபெயர்ப்பால் குறிக்கிறது.[2]

இது செவ்வாய் சுற்றுகலன் ஒருங்கொளிக் குத்துயரமானியில் (MOLA) எடுத்த தார்சிசு பகுதிப் படிமம். செவ்வாய்க் கோளின் மேற்கு அரைக்கோளத்தில் தார்சிசு பகுதி (சிவப்பு மற்றும் பழுப்பு நிற நிழல்களில் காட்டப்பட்டுள்ளது) இருக்கிறது. உயரமான எரிமலைகள் வெள்ளை நிறத்தில் தோன்றகின்றன. தார்சிஸ் மான்ட்டெசு என்பது மையத்தின் இடதுபுறத்தில் உள்ள மூன்று சீரமைக்கப்பட்ட எரிமலைகள் ஆகும். ஒலிம்பசு மோன்சு வடமேற்கில் அமைந்துள்ளது. வடக்கில் உள்ள ஓவல் பகுதி ஆல்பா மோன்சு ஆகும். பள்ளத்தாக்கு அமைப்பு வாலசு மாரினெரிசு ஆகும். அதன் அருகிலுள்ள தார்சிசிலிருந்து கிழக்கு நோக்கி நீண்டுள்ளது. இங்கே ஒரு காலத்தில் வெள்ள நீரைக் கொண்டு சென்ற வெளியேறும் கால்வாய்கள் வடக்கே நீண்டுள்ளன.

மேலும் காண்க

தொகு
  • செவ்வாய்க் கோளின் புவிப்பரப்பியல்
  • செவ்வாய்க் கோளின் புவியியல்
  • செவ்வாய்க்கோளில் எரிமலை வெடிப்பு

விளக்கக் குறிப்புகள்

தொகு
  1. Officially, "தார்சிசு" ஒரு மேற்பரப்புத்தெறிப்புக் கூறுபாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tharsis". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology Science Center. பார்க்கப்பட்ட நாள் 2013-11-29.
  2. "Welcome to the Planets Version 1.5". pds.jpl.nasa.gov.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்சிசு&oldid=4109583" இலிருந்து மீள்விக்கப்பட்டது