தாலோ என்பது இந்தியாவின் கோவாவில் அனைத்து மத சடங்குகளின்போதும்  ஆடப்படும் ஒரு பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும். இந்த நடனம் பெரும்பாலும் பெண்களால் அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு பிரார்த்தனையாகயும் ஆடப்பட்டு வருகிறது . நடனம் ஆடப்படும் போது பாடல்கள் பொதுவாக கொங்கனி மொழி அல்லது மராத்தியில் பாடப்படும். இத்தகைய பாடல்களின் கருப்பொருள்கள் பொதுவாக சார்ந்தவையாக இருந்தாலும் சமூக கருத்துக்களும் அவ்வப்போது பாடப்படுவதும் உண்டு. இது குளிர்காலத்தின் தொடக்கத்தில் பூஷா மாதத்தில் ஒரு வார காலத்திற்கு நடத்தப்படுகிறது. [1] [2] விழாவின் இறுதி நாளில் பெண்கள் அழகாக உடை அணிந்து ஆண்களின் கேலிச்சித்திரங்களை வரைந்து கொண்டாடுவார்கள்.

தாலோ
பெண் தாலோ நடனக்கலைஞர்கள்
வகைநாட்டுப்புற நடனம்
தோற்றம்கோவா, இந்தியா

புது தில்லியில் நடந்த நாட்டுப்புற நடன விழாவில் வழங்க தாலோ தேர்வு செய்யப்பட்டு [3] பெருமைப்படுத்தப்பட்டது.

ஆடும் நுட்பம் தொகு

இந்த நடன வகையில், 12 முதல் 24 பெண்கள் இரண்டு இணையான வரிசைகளில் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வகையில் வரிசையில் இருக்கும் அனைவரும் அருகில் இருப்போரின் கைகளுடன் கோர்த்துக்கொண்டு ஒரே தாள லயத்தில் ஒன்றாக நடனமாடுகின்றனர். [4]

ஃபுக்டியுடன் ஒப்பிடுகையில், இந்த நடனம் மெதுவான வேகத்தில் ஆடப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Goa, Daman and Diu (India) Dept. of Information. Volumes 1-2. 
  2. "Goan Folk Dances and Art Forms". Archived from the original on 2010-09-17. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
  3. Debates; Official Report, Volume 2. Issues 17-32. 1967. p. 551. https://books.google.com/books?id=HD4IAQAAIAAJ&q=goan+dance+dhalo. 
  4. Mohanty, P.K. (2006). Encyclopaedia Of Scheduled Tribes In India (5 Vols.). பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-8205-052-9. https://books.google.com/books?id=cGzQub7POOQC&pg=PA95. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலோ&oldid=3657668" இலிருந்து மீள்விக்கப்பட்டது