தால்மியா பவன்

தால்மியா பவன் (Dalmia Bhawan) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரத்தில் உள்ளது. 1835 மற்றும் 1845 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மேற்கு வங்காளத்தில் இருந்த முன்னாள் டச்சு காலனியான செராம்பூரைச் சேர்ந்த கோசுவாமி குடும்பத்தால் இம்மாளிகை கட்டப்பட்டது.[1]

தால்மியா பவன்
Dalmia Bhawan
डालमिया भवन
தால்மியா இல்லம், வாரணாசி
முந்திய பெயர்கள்தால்மியா இல்லம், தால்மியா பவன்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்தோ சரசனிக் பாணி
நகரம்வாரணாசி
நாடுஇந்தியா
உரிமையாளர்குணால் தால்மியா
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இராசா கிசோரிலால் கோசுவாமி
வலைதளம்
www.sabo.co.in

வரலாறு.

தொகு

இந்த மாளிகை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளத்தில் (இப்போது மேற்கு வங்காளம்) செராம்பூரைச் சேர்ந்த இராசா கிசோரிலால் கோசுவாமி என்பவரால் கட்டப்பட்டது.[2][3] 1960 ஆம் ஆண்டில், இந்த சொத்து இலட்சுமி நிவாசு தால்மியாவால் வாங்கப்பட்டது.[4][5][6]

கட்டிடக்கலை

தொகு

கட்டிடக்கலை பாணி இந்தோ சரசனிக் பாணி மற்றும் நியோ கிளாசிக்கல் எனப்படும் பண்டைய கிரேக்க இலத்தீன் கலைக்குரிய கூறுகளின் கலவையாகும். இதன் சமச்சீர் தோற்றம் மற்றும் பரந்த வராண்டாக்களுக்குத் திறக்கும் அறைகளைக் கொண்ட கட்டிடம் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமான கருத்தான 'தோட்ட வீடுகளை' நினைவூட்டுகிறது. இந்தியாவில், டச்சு கிழக்கிந்திய கம்பெனி பிணைக்கப்பட்ட கட்டமைப்புகள் மிகவும் அரிதானவை. தால்மியா பவன் டச்சு செல்வாக்கைக் கொண்டுள்ளது, இது டென்மார்க்கு கிழக்கிந்திய நிறுவனத்துடன் ஒரு தெளிவான இணைப்பைக் கொண்டுள்ளது.[7][8]

விருந்தினர்கள்

தொகு

வாரணாசியில் உள்ள தால்மியா பவனில் தங்கிய விருந்தினர்கள் அன்னி பெசன்ட், சவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அடங்குவர்.[9][10][1] எழுத்தாளரும் கவிஞருமான அரிவன்சு ராய் பச்சன் தனது சுயசரிதையில் தால்மியா பவனைப் பற்றி குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Datta, Rangan (7 November 2023). "Dalmia House in Varanasi: Where heritage meets hospitality". The Telegraph. My Kolkata. https://www.telegraphindia.com/my-kolkata/places/dalmia-house-in-varanasi-where-heritage-meets-hospitality/cid/1978321. 
  2. "বেনারসের অন্য ঐতিহ্য". Sananda. 26 December 2023. https://www.sananda.in/story?link=398073. 
  3. "From Goswami Bari to Dalmia Bhawan: Historic transformation into luxury heritage hospitality". Financial Express. July 2, 2024. https://www.financialexpress.com/life/lifestyle/sabo-boutique-hotel-reviving-varanasis-colonial-charm-and-hospitality-legacy/3540717/. 
  4. "The Dalmia Mansion: A treasure in Banaras". [The Fiji Times]. March 22, 2024. https://fijitimes.net.au/the-dalmia-mansion-a-treasure-in-banaras/. 
  5. ""In Varanasi, the spiritual capital of India"". Daily Excelsior. 8 October 2023. https://www.dailyexcelsior.com/in-varanasi-the-spiritual-capital-of-india/. 
  6. ""Dalmia Bhawan, Varanasi, to transform into the SABO Boutique Hotel"". Economic Times. 28 October 2023. https://hospitality.economictimes.indiatimes.com/news/hotels/dalmia-bhavan-varanasi-to-transform-into-the-sabo-boutique-hotel/104778642. 
  7. Gopal Rao, Bindu (12 November 2023). ""72 hours in Varanasi, Uttar Pradesh"". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/travel/72-hours-in-varanasi-uttar-pradesh-11728231.html. 
  8. ""Varanasi: The story of Dalmia Bhavan in the City of Surprises"". Shillong Times. 24 September 2023. https://theshillongtimes.com/2023/09/24/varanasi-the-story-of-dalmia-bhavan-in-the-city-of-surprises/. 
  9. ""डालमिया हाऊस का बदलेगा कलेवर, दिखेगा नए रूप में"". Jagran. 29 October 2023. https://www.jagran.com/uttar-pradesh/varanasi-city-the-look-of-dalmia-house-will-change-it-will-be-seen-in-a-new-form-23568089.html. 
  10. "From ancient structures to luxury retreats: Varanasi sees boom in spiritual tourism". [Mint]. April 14, 2024. https://www.livemint.com/news/india/from-ancient-structures-to-luxury-retreats-varanasi-sees-boom-in-spiritual-tourism-11712760883791.html. 

வெளி இணைப்புகள்

தொகு
  • அதிகாரப்பூர்வ இணையதளம்ஃ SABOசபோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=தால்மியா_பவன்&oldid=4086762" இலிருந்து மீள்விக்கப்பட்டது