தால் சிங் பிசேன்
இந்திய அரசியல்வாதி
தால் சிங் பிசேன் (Dhal Singh Bisen) (பிறப்பு 14 மே 1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தால் சிங் பிசேன் 2003 முதல் 2005 வரை மத்தியப் பிரதேச அரசில் அமைச்சராக இருந்துள்ளார். இவர் 1990, 1993, 1998, 2003 ஆகிய ஆண்டுகளில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2011 வரை 2013 வரை மத்தியப் பிரதேச அரசின் 4வது மாநில நிதிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[2][3]
தால் சிங் பிசேன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
முன்னையவர் | போத்சிங் பகத் |
தொகுதி | பாலாகாட், மத்தியப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 மே 1952[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பானுமதி பிசேன் |
பிள்ளைகள் | 3 (2 மகள்கள் & 1 மகன்) |
வாழிடம்(s) | வீ. எண். 397, (புதியது 1226), மா. க. இல்லம் அருகில், செனாய், மத்தியப் பிரதேசம், 480661 |
கல்வி | A.V.M.S, D.H.B |
தொழில் | மருத்துவர், அரசியல்வாதி, விவசாயி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
- ↑ "Balaghat Lok Sabha Election Result 2019". Firstpost. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Lok Sabha elections: RSS stamp on BJP ticket distribution in Madhya Pradesh". Rajendra Sharma. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 April 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.