தாளிப்பு
தாளிப்பு என்பது இந்திய சமையலில் சில உணவுகளின் இறுதிகட்ட செய்முறையாக சுவையையும் நறுமணத்தையும் கூட்டிட சேர்க்கப்படும் தொகுப்பாகும். தமிழக சமையலில் பொதுவாக சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் முதலியன இட்டு கடுகு வெடித்ததும் தயாரித்துள்ள இரசம், குழம்பு, வேக வைத்தக் காய்களில் "தாளித்து" சமையலை நிறைவு செய்வர். வட இந்தியாவில் "தட்கா" என்று அழைக்கின்றனர்.
கடுகு வெடிக்கும்வரை சூடேற்றுவது போல ஒருவரை நிரம்ப வேதனைக்குள்ளாக்கும்போது "தாளிக்கிறாங்க" என்ற வழக்குச்சொல்லும் இதனையொட்டி எழுந்துள்ளது.