தாவரங்களில் மெக்னீசியம் குறைபாடு
தாவரங்களில் மெக்னீசியக் குறைபாடு என்பது அதிக அமிலத்தன்மையுள்ள மிருதுவான மணற்பாங்கான மண்ணில் காணப்படக்கூடிய தாவரங்களில் அறியப்படும் ஒரு குறிப்பிடத்தகுந்த குறைபாடு ஆகும். தாவரங்களுக்கு மெக்னீசியம் ஒரு மிக முக்கியமான இன்றியமையாத ஊட்டப்பொருள். வழக்கமாக தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான மெக்னீசியம் 0.2-0.4% உலர்ந்த பொருளில் காணப்படுகிறது.
மெக்னீசியம் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒளிச்சேர்க்கையின்போது பசுங்கணிகத்தில் காணப்படும் மைய அணுவாக மெக்னீசியம் செயல்படுகிறது. ஆகவே போதுமான அளவுக்கு மெக்னீசியம் இல்லை என்றால் பசுங்கணுகம் சிதைவடைந்து தாவரங்கள் அழுகத் தொடங்கிவிடுகின்றன. இலை நரம்புகளுக்கிடையே பச்சை நிறமாக தோன்றுவதற்குப் பதிலாக மஞ்சள் நிறமாக தோன்றக்கூடிய பசுங்கணிகக்குறைநோய், எனப்படக்கூடிய மெக்னீசியம் பற்றாக்குறை நோய் தாவரங்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு மெக்னீசியம் குறைவு தாவரங்களில் ஏற்படும்போது முதலில் பழைய இலைகளில் உள்ள பசுங்கணிகம் சிதைவடைந்து அது இளஞ்சிவப்பு நிறத்தை இளம் இலைகளுக்கும் கடத்துகிறது. இதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடுக்கப்படுகிறது. எனவே முதலில் பழைய இலைகளில் உண்டாகும் பசுங்கணிகநோய் நிறமாற்றம் பிறகு படிப்படியாக இளம் இலைகளுக்குப் பரவுகிறது.[1] மெக்னீசியம் பல முதன்மை வினையூக்கிகளுக்கு இயக்குவிப்பானாகவும் பயன்படுகிறது. எடுத்துகாட்டாக, ரிப்பூலஸ் பைப்பாஸ்பேட் கார்பாக்சிலேஸ் (RuBisCO) மற்றும் பாஸ்போஎனோல்பைருவேட் கார்பாக்சிலேஸ் (PEPC), ஆகிய இந்த இரு வினையூக்கிகள் கார்பன் நிலைநிறுத்தம் என்ற செயலுக்கும் காரணாமாக அமைகின்றன. இப்படியாக மெக்னீசியம் குறைபாடு தாவரங்களில் ஒளிச்சேர்க்கை குறைவதற்கும் வினையூக்கி செயல்பாடு குறைவதற்கும் காரணமாகின்றன. மேலும் மெக்னீசியம் ரிபோசோம் அமைப்பை உறுதிப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இப்படியாக மெக்னீசியம் குறைபாடு ரிபோசோம்களில் பலபடியாக்கமகற்றல் செயலுக்கு காரணமாகின்றது. இது தாவரங்களில் முதிர்ச்சிக்கு முன்பான முதிர்ச்சி ஏற்பட செய்கிறது. நீண்ட மெக்னீசிய குறைபாட்டுக்குப் பிறகு நசிவு நிகழ்வுக்கும் காரணமாகின்றது. அதாவது, முதிர் இலைகள் உதிர்தலுக்கு காரணமாகவும் சிறிய அளவிலான பழங்களை மட்டும் உண்டாக்கவும் காரணமாகவும் அமைகிறது.
பொதுவாக மெக்னீசியம் குறைபாடு சிங்க் மற்றும் குளோரின் குறைபாட்டுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. வைரசுகள், அல்லது இயற்கை வயதாவது போன்றவற்றுடன் ஒத்த அறிகுறிகள் காணப்படுகின்றன. 25 கிராம் எப்சம் உப்பு ஒரு லிட்டர் நீரில் கரைத்த கரைசல் அல்லது நொறுக்கப்பட்ட டோலோமிடிக் சுண்ணாம்பு ஆகியவற்றை மண்ணில் கலந்து இந்த மெக்னீசியம் குறைபாட்டினை நீக்கலாம். அதிகப்படியான மழைப் பொழிவினால் ஏற்படும் மெக்னீசியம் குறைபாட்டைச் சரிசெய்ய வீடுகளில் உண்டாகும் கழிவுகளிலிருந்து கூட்டு உரம் தயாரித்து மண்ணில் கலந்து மண்ணுக்குப் போதுமான மெக்னீசியம் சத்தினை ஈடுசெய்யலாம்.[2]
மனிதரில் மகனீசியக் குறைபாடு
தொகுமனிதரில் மகனீசியக் குறைபாடு (Magnesium deficiency in humans) என்பது உடலில் மகனீசியம் குறைந்த அளவில் உல்லபோது ஏற்படும் மின்பகுளி குலைவாகும்மிது பல்வேரு நோய்க்குறிகளை உருவாக்குகிறது.[3] அறிகுறிகளில் நடுக்கம், தசைப்பிடிப்பு, பசியிழப்புஆளுமை மாற்றம், குறைவான ஒருங்கிணைதிறன் nystagmus ஆகியவை காணப்படும். [4][5] கால்கைவலிப்பு, இதய நிறுத்தம் போன்ற சிக்கல் உருவாகலாம்torsade de pointes.[4] மகனீசியம் குறைவாக உல்ளவருக்கு பொட்டாசியமும் குறைந்திருக்கும்.[4]
இதற்குக் காரணங்களாக உணவு உட்கொள்ளல் குறைதல், குடிப்பழக்கம், கடும் வயிற்றுப் போக்கு, சிறுநீரிழப்பு கூடுதல், குடலூட்டம் உற்ஞ்சாமை, நீரிழிவுநோய் ஆகியவை அமைகின்றன. .[4][6][7] புரோசுமைடு புரோட்டான் ஏற்புத் தடுப்பிகள் உட்பட்ட, அதிக எண்ணிக்கையில் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் மகனீசியக் குறைநோய் உருவாகும்.[5]குருதியில் மகனீசிய அளவுகள் குறைதலை வைத்து நோயை அறியலாம்.[8] யல்பான மகனீசிய அளவு 0.6- 1.1 mmol/L (1.46–2.68 mg/dL) ஆகும். மகனீசியம் 0.6 mmol/L (1.46 mg/dL) அளவினும் குறையும்போது, மகனஈயக் குறைநோய் உருவாகும்.[4] Specific electrocardiogram (ECG) changes may be seen.[4]
இதற்கு வாய்வழியாகவோ உருதிக்குழல் ஊட்டாகவோ மகனீசியத்தைத் தரவேண்டும்.[5]சிக்கலான அறிகுறி உல்ளவருக்கு ஊசிவழியாக மகனீசியச் சல்பேட்டைசெலுத்தவேண்டும்.[4] Associated low potassium or low calcium should also be treated.[5] The condition is relatively common among people in hospitals.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hermans C.; Vuylsteke F.; Coppens F.. "Systems Analysis of the responses to long-term magnesium deficiency and restoration in Arabidopsis thaliana". New Phytologist 187: pp. 132–144.
- ↑ "Problem Solving: Magnesium Deficiency".
- ↑ "Definition of Magnesium Deficiency". MedicineNet.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "European Resuscitation Council Guidelines for Resuscitation 2010 Section 8. Cardiac arrest in special circumstances: Electrolyte abnormalities, poisoning, drowning, accidental hypothermia, hyperthermia, asthma, anaphylaxis, cardiac surgery, trauma, pregnancy, electrocution". Resuscitation 81 (10): 1400–1433. October 2010. doi:10.1016/j.resuscitation.2010.08.015. பப்மெட்:20956045.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Hypomagnesemia". https://www.merckmanuals.com/professional/endocrine-and-metabolic-disorders/electrolyte-disorders/hypomagnesemia.
- ↑ "Magnesium in man: implications for health and disease". Physiological Reviews 95 (1): 1–46. January 2015. doi:10.1152/physrev.00012.2014. பப்மெட்:25540137.
- ↑ "Hypomagnesemia in Type 2 Diabetes: A Vicious Circle?". Diabetes 65 (1): 3–13. January 2016. doi:10.2337/db15-1028. பப்மெட்:26696633.
- ↑ Goldman L, Schafer AI (2015). Goldman-Cecil Medicine E-Book (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 775. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323322850.