எப்சம் உப்பு

Epsam salt(MgSo4 H2O)

எப்சம் உப்புதொகு

இது சிறிய நிறமில்லாத ஊசி வடிவம் கொண்ட படிகம். பொடி செய்தால் வெண்மையாயிருக்கும். இங்கிலாந்தில் எப்சம் என்னுமிடத்திலுள்ள தாதுநீரில் மிகுதியாகக் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. எப்சம் உப்புக்களில் சில சாய் சதுர வடிவமானவை. நாகசல்பேட்டு, நிக்கல் சல்பேட்டு, மக்னீசியம் குரோமேட்டு ஆகிய படிகங்களும் சாய் சதுர வடிவானவையாகையால், மேற்கூறிய படிகங்கள்யாவும் சமவடிவப் படிகங்கள் எனப்படும். 

கிடைக்கும்இ இடங்கள்தொகு

பொதுவாகக் கடல் நீரிலும் தாதுநீரிலும் கரைந்து கிடைக்கும், சில இடங்களில், பூமியின் மேற்பரப்பில் நார் உப்புகளாக வெட்டியெடுக்கப்படுகிறது. சில இடங்களில் சுண்ணாம்புக்கல், கர்ப்பூர சிலாசத்து ஆகியவற்றில் சேர்ந்திருக்கிறது. ஐரோப்பாவிலுள்ளவர்கள் இதை ஜெர்மனியிலுள்ள இந்த உப்புப்படிவுகளிலிருந்து பெறுகிறார்கள். சோடா நீர் தயாரிப்பில் பயன்படும் கார்பன்-டை-ஆக்சைடைத் தயாரிக்கும்போது உபபொருளாக இதை அமெரிக்காவில் பெறுகிறார்கள்.

பயன்கள் :தொகு

மக்னீசியத்தின் கரையாக்கூட்டுக்கள், தீப்பற்றாத பருத்தி, சிங்காரப் பொருள்கள், களிம்புகள் ஆகியவை தயாரிக்க எப்சம் உப்புப் பயன்படுகிறது. அச்சுத்தொழில், சாயத்தொழில் ஆகியவைகளிலும், காகிதங்களுக்குப் பருமன் கொடுக்கும் தொழிலிலும் மிக அதிகமாகப் பயன்படுகிறது. மிகுதியாக இதுவே பேதி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குடலிள்ள நீர் குடலால் உறிஞ்சப் படாமல் தடுக்கிறது. நீர் மிகுந்ததும், குடல் சுருங்கிப் பேதியை உண்டாக்குகிறது. மருந்தில் ஒரு பகுதியை உடம்பு உறிஞ்சிக் கொள்வதால் மூத்திரம் மிகுதியாக உண்டாகும்.

தீமைகள்தொகு

இம்மருந்தை அடிக்கடிப் பயன்படுத்தினால் உணவு உடலில் சேராது, மருந்து சாப்பிட்டால் தான் மல விருத்தியாகும் என்னும் வழக்கமும் உண்டாய்விடும். அதனுடன் வயிற்றில் நோயுடையவர்கள் இம்மருந்தை உபயோகித்தலாகாது.

[1]

  1. http://www.tamilvu.org/library/libindex.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்சம்_உப்பு&oldid=3365168" இருந்து மீள்விக்கப்பட்டது