தாவரப் பிறப்பாக்கம்

வித்துகள்,வெட்டுத்துண்டங்கள்,குமிழ்கள் மற்றும் ஏனைய வேறுபட்ட தாவரமூலங்களிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்கும் செயன்முறை தாவரப் பிறப்பாக்கம் (Plant propagation) எனப்படும். தாவரப் பிறப்பாக்கம் இயற்கையான பிறப்பாக்க முறை, செயற்கையான பிறப்பாக்க முறை என மேலும் இரண்டு வகைப்படும்.

இலிங்கமுறைப் பிறப்பாக்கம்

தொகு

வித்துக்கள் மற்றும் வித்திகளின் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் இலிங்கமுறைப் பிறப்பாக்கம் ஆகும். வித்து என்பது தாவரங்களின் ஒரே இனங்களுக்கிடையில் நிகழும் இலிங்க முறை இனப்பெருக்கத்தின் மூலம் பெறப்படுவதாகும். இங்கு கலப்புப் பிறப்பாகாம் நடைபெறுவதால் தாய்த் தாவரத்திலிருந்து வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட சந்ததியை அது உருவாக்கும்.

இலிங்கமின் முறைப் பிறப்பாக்கம்

தொகு

தாவரங்களின் வித்து தவிர்ந்த ஏனைய பதியப் பகுதிகளால் நடைபெறும் பிறப்பாக்கம் இலிங்கமின் முறைப் பிறப்பாக்கம் அல்லது பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.

பொதுவான இலிங்கமின் இனப்பெருக்க முறைகள்

தொகு
  • பதி வைத்தல் - காற்றுப்பதி, நிலங்கீழ்ப்பதி
  • ஒட்டுதல் - அரும்பு ஒட்டு, கிளாஇ ஒட்டு
  • நுண்பிறப்பாக்கம்
  • ஓடிகள், குறுங்கிடைகள்
  • வெட்டுத்துண்டங்கள்
  • வேர்கள்
  • பட்டைப்பகுதிகள்

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரப்_பிறப்பாக்கம்&oldid=1401205" இலிருந்து மீள்விக்கப்பட்டது